Aran Sei

ஆன்லைனுக்கு கட்டுப்பாடு – கருத்துரிமையை பறிக்கும் செயல் – இயக்குனர் விஜய்வரதராஜ்

யூட்யூப், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், ஒலிக்காட்சிகள், செய்தி இணையதளங்கள்  போன்றவைத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

நேற்று (நவம்பர்10) இரவு, குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்ட  இந்த ஆணையை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், அரசியலமைப்புச் சட்டம் 77 உள்ள 3ஆவது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதிகள், 1961-ஐ திருத்துவதன் மூலம், இந்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

இதன் மூலம், ஆன்லைன் தளங்களில் வெளியாகும் செய்தி, ஆடியோ, வீடியோ மற்றும் திரைப்படங்கள் தொடர்பான கொள்கைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விதிகள் ’இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) 357 வது திருத்த விதிகள், 2020 ’என்று அழைக்கப்படவுள்ளது. மேலும், இச்சட்டம் உடனே அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் யூட்யூப் மற்றும்  நெட்ப்ளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார், ஜீ5 போன்ற பல ஓடிடி தளங்கள் உள்ளன. இவைகளில் திரைப்படங்கள் மட்டுமின்றி, திரைத்தொடர்களும், தொலைக்காட்சி நாடகங்களும், நிகழ்ச்சிகளும் வெளியாகி வருகின்றன.

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், பல திரைப்படங்களும் திரைத்தொடர்களும் ஓடிடியில் வெளியாகின. மேலும், இணையத்தில் மட்டும் இயங்கக்கூடிய செய்தி நிறுவனங்களும் பல உள்ளன. இனி இவை எல்லாம் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

இதுகுறித்து, திரைப்பட இயக்குனரும் பிரபல யூட்யூப் சேனலான ‘டெம்பிள் மங்கீஸ்’ சேனலைச் சேர்ந்த விஜய் வரதராஜிடம், அரண்செய் பேசிய போது, “நார்மல் மீடியாவில் பேச முடியாததை ஆன்லைன் மீடியாவில் பேசலாம். அதிலுமே, பின்னால் ஒரு சென்சார் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், அதில்தான் பொது மக்கள் மீம்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கை வைத்து விட்டார்கள்” என்று கூறினார்.

மேலும், “சென்சார் முறை என்பது பாலியல் ரீதியிலான காட்சிகளை மட்டும் தணிக்கை செய்யாது யாரும் பேசாத பிரச்சனைகளைப் பேசினாலும் அதையும் தணிக்கைச் செய்யும். பின்பு, எங்களைப் போன்று இணையம் வழியாக மக்களிடம் பேசுபவர்களை, எல்லாவற்றையும் மூடிவிட்டு போக சொல்வார்கள்.” என்று விஜய் வரதராஜ் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்