Aran Sei

நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்

முகலாயப் பேரரசர் அக்பரும் சமஸ்கிருதமும்’ என்ற புத்தகத்தின் குறிப்பிடத்தக்க இரண்டு தொகுப்புகள் ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு (2012) வெளிவந்தது. மூன்றாவது மெல்லியத் தொகுப்பு 2019 ம் ஆண்டு வெளிவந்தது.

அந்த மூன்று தொகுப்புகளையும் எழுதியவர் இளம் சமஸ்கிருத அறிஞர் பிரதாப் குமார் மிஸ்ரா. வாரணாசியைச் சேர்ந்த அகில பாரத இஸ்லாமியர் – சமஸ்கிருத சரங்ஷன் ஏவம் பிரச்ய ஷோத் சன்ஸ்தான் என்ற அமைப்பு அவற்றை வெளியிட்டது.

இந்தப் புத்தகம் தற்போதைய அரசியல் ஆதரவோடு முகலாயர்களை “இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்கள்” மற்றும் “இந்தியாவின் மதம் மற்றும் கலாச்சாரத்தை அழிப்பவர்கள்” என்று முத்திரை குத்தப்படுவதிலிருந்து துவங்குகிறது. இந்த மாயத் தோற்றம் 19 ம் நூற்றாண்டிலிருந்தே படிப்படியாக வரலாறு, இலக்கியம், நாட்டுப்புறம் மற்றும் அரசியல் மன்றங்கள் ஆகிய பல்வேறு வடிவங்களில் வளர்க்கப்பட்டு “நமக்கு எதிராக அவர்கள்” என்ற இரட்டை கோட்பாடு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்

இதுவரை, முகலாயர் குறித்த அனைத்து தீமைகளுக்கும் சுருக்கமாக பேரரசர் ஔரங்கசீப்பையும் அவருடைய எதிர்முனையாக அக்பரும் இருப்பதாகக் காட்டப்பட்டு வந்தது‌.  இது “நல்ல இஸ்லாமியர் மற்றும் கெட்ட இஸ்லாமியர் கண்டுபிடிப்பதற்கான அறிகுறியாக வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தகுதியையும் கூட தற்போதைய அரசியல் நடப்புகள் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்து இஸ்லாமியர்களையும் “தீயவர்கள்” என்ற ஒற்றைக் குடையின் கீழ்‌ கொண்டு வருகிறது. இஸ்லாமியர் என்ற ஒற்றை அடையாளம் அவர்களுக்குள் உள்ள அனைத்து வேறுபாடுகளையும் கரைத்து விடுகிறது; ஜேம்ஸ் மில்லிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை மறந்துவிட அனுமதிக்கக் கூடாது.

ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின், ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் கவனமாக அச்சிடப்பட்டடு வெளிவந்த அந்த மூன்று தொகுதிகளும் வரலாற்றை “இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும்” என்ற ஒற்றைப் பார்வையில் பார்ப்பதை எதிர்த்து நமக்குத் தரும் எச்சரிக்கை நினைவூட்டல் ஆகும்.

முகலாயர்கள் அல்லது அவர்களுக்கு முந்தையவர்கள் கூட சமஸ்கிருதம் மற்றும் வட்டார மொழி அறிவில்  ஆர்வம் கொண்டவர்களாக, அவற்றின் புரவலர்களாக இருந்தது என்ற கருத்தாக்கம் புதிது அல்ல.

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?

இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்களால் அதன் ஒன்று அல்லது மற்றொரு கூறு குறித்த பல ஆய்வுகள் பல பத்தாண்டுகளாக கிடைக்கின்றன. ஜே.பி. சவுதிரி, 1941 ல் Muslim Patronage to Sanskrit Learning என்ற நூலையும்,1954ல் Contribution of Muslims to Sanskrit Learning என்ற இரண்டாவது நூலையும் எழுதியுள்ளார். இவை வெறும் விளக்குவதற்காக தரப்பட்ட இரண்டு எடுத்துக்காட்டுகள்தான்.

மிஸ்ரா மரியாதையுடன் குறிப்பிடும் நூலான ஆவ்ட்ரே ட்ரஸ்கேவின் தலைசிறந்த படைப்பான 2016 ம் ஆண்டில் வெளிவந்த Culture of Encounters: Sanskrit at the Mughal Court அண்மைக்கால எடுத்துக்காட்டாகும். இருப்பினும், மிஸ்ராவின் கவனம் ஒரே ஒரு முகலாயப் பேரரசரான அக்பர் மீதுதான் இருந்தது. சமஸ்கிருதத்திற்கு பேரரசுகளின் ஆதரவு மற்றும் அதன் விளைவுகள் குறித்து  உட்புகுந்து அவர் ஆய்வு செய்துள்ளார்.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

அக்பரின் வாழ்க்கையை  பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் அவரது அரசவையில் இபாபத்கானா விவாதம் மற்றும் மதம் பற்றிய சர்ச்சைகளை குறித்து விளக்கும் அதிகாரத்தை  உலேமாக்களிடமிருந்து எடுத்து பேரரசர் கையில் அதனை ஒப்படைத்த மஹ்ஜார்(Mahzar) ஆவணம் உட்பட அப்போது இருந்த மத சூழலை காட்டி- மிஸ்ரா அவரது பணிகளின் முக்கிய கருப் பொருளில் முழுக் கவனத்தையும் செலுத்தி உள்ளார். அவர் அக்பர் 36 சமஸ்கிருத பண்டிதர்களை ஆதரித்ததை கண்டுபிடித்துள்ளார்.

அப்துர் ரஹ்மான் கான்-இ- கான், ஷேக் ஃபைசி, முல்லா அப்துல் காதிர் பதௌனி, சாகிப் கான் போன்ற இஸ்லாமியர் சமஸ்கிருத அறிஞர்களைத் தவிர, அவரது காலத்தில் மிகவும் பெயர் பெற்ற, அக்பரால் ஒரு சிறிய நாட்டையே கொடுத்து ஆதரிக்கப்பட்ட சமஸ்கிருத அறிஞர் மகாமகோபாத்தியாயா மகேஷ் தாக்கர்,  ஹிர்விஜய் சூரி உள்ளிட்ட 17 சமண மத சமஸ்கிருதக்காரர்கள், இன்னும் பலர் அதில் அடங்குவர்.

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

அத்துடன் அவர் அதர்வ வேதம், யோகவாசிஸ்தா, மகாபாரதம், இராமாயணம், பகவத் கீதை, பஞ்சதந்திரம், ராஜ தரங்கினி, லீலாவதி, சின்ஹாசன் பாட்டிசி போன்ற பல சமஸ்கிருத நூல்களை பாரசீக மொழியில் 14 பேரைக் கொண்ட மொழி பெயர்ப்பு பணியகம் மூலம் மொழி பெயர்க்கச் செய்தார்‌. அக்பரின் கட்டளைக்கிணங்க 12 தனிப்பட்ட நூல்கள் எழுதப்பட்டன. அதில் பாரசீக மொழி இலக்கணம், ஆதவனின் ஆயிரம் நாமங்கள், அல்லோபநிஷத் உள்ளிட்ட மேலும் பல நூல்கள் அடங்கும்.

இதற்கெல்லாம் மேலாக, அக்பர் ஆயிரம் சமஸ்கிருதப் பெயர்களை தானே சொந்தமாக தொகுத்து வைத்திருந்தார். அது இந்த நூலின் மூன்றாம் தொகுதியில் தரப்பட்டுள்ளது. ஆர்வமூட்டும் வகையில், அபுல் ஃபாசலின் அக்பர் நாமா நூலின் முதல் பாகமும் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.  1962 ல் வெளியிடப்பட்ட அதன் பதிப்பாசிரியராக சுபத்ரா ஜா இருந்தார். மிஸ்ராவும் அதனை மீண்டும் இங்கே கொடுத்துள்ளார்.

மிஸ்ரா சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அக்பர் அரசவையிலும் பின்னரும் வெளியான இதழ்களையும் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டு தான் கடினமாக உழைத்து ஒன்று சேர்த்த உண்மைகளின் அனுபவ நம்பகத்தன்மையை நிறுவினார். இதில் அக்பரின் ஆதரவின் கீழ் நடந்த பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்த 53 அறிஞர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும் அடங்கும்‌. இறுதியில், அவர் தனது தரவுகளின் துல்லியமான நம்பகத்தன்மைக்கு மிகக் குறைந்த அளவு ஐயத்திற்கு இடமளித்துள்ளார்.

நீட் தேர்வு: தமிழ்நாடு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டதா? – உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் வி. கடார்கி

இவை எல்லாவற்றையும் அரசியல் மேலாண்மைக்கான அறிவுபூர்வமான செயல் என்று ஒதுங்கிக் தள்ளிவிட முடியுமா? ஒருவேளை ஒருவர் சிந்தனை மேற்கூறிய ஒற்றை கருத்தியலைத் தாண்டிச் செல்லாமலிருந்தால் அது எளிதில் சாத்தியமாகலாம். ஆனால் வரலாற்றை உருவாக்கிய அக்பர், அசோகர் போன்றவர்கள், தங்களுக்கும் மக்களுக்கும் தங்களை வளர்த்தெடுத்த ஒரே மாதிரியான வார்ப்புகளை உடைத்து, விடுதலைக்கான தங்கள் சொந்த வடிவங்களை உருவாக்கிய தொலை நோக்குக் கொண்டவர்களாக இருந்தனர்.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

அக்பர் தனது அரசியல் அடையாளத்திற்காக இத்தகைய மிகப் பெரிய அளவிலான முயற்சியை எடுத்திருக்க வேண்டியதில்லை; அதற்கு ஒன்றிரண்டு நிகழ்வுகளே போதுமானதாக இருந்திருக்கும். தான் ஆட்சி செய்யும் மக்களின் அறிவு மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்துக்கொண்டு பரிவு காட்டுவது அவரது நிர்வாகத் தொலை நோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. உண்மையில், ட்ரஸ்கே மிகவும் செப்பமாக வாதிடுவது போல, இந்தத் தொலைநோக்குப் பார்வை முகலாய அரசையும், அதன் அரசவை கலாச்சாரத்தையும் 1560 ம் ஆண்டிலிருந்து நூறாண்டுகளுக்கு  ஊக்கப்படுத்தியது. அவுரங்கசீப் காலத்தில் இதில் பின்னடைவு  ஏற்பட்ட போதும் முகலாயர் ஆட்சி நீடித்த வரை அது ஒரு உயிரூட்டும் சக்தியாக இருந்தது. இது அரசு நிர்வாகத்தில்  கூடுதல் சேர்க்கை அல்ல.

www.m.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 எழுதியவர்: ஹர்பன்ஸ் முகியா

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்