Aran Sei

வலியோடு முறிந்த மின்னல் – கவிஞர் ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா மறைந்தார்

விஞரும் பாடலாசிரியருமான ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா மறைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா, மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். வெண்ணிலா கபடி குழு, ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான காமராஜ் படத்திற்கு, செம்பூர் ஜெயராஜுடன் இணைந்து பிரான்சிஸ் கிருபா திரைக்கதை எழுதியுள்ளார்.

இவரின் கன்னி நாவல் தமிழ் இலக்கிய பரப்பில் பெரும் அலையை உண்டாக்கியது. கன்னி நாவலுக்கு 2007 ஆம் ஆண்டில் சிறந்த புதினத்திற்கான ஆனந்த விகடன் விருதைப் பெற்றார். மேலும், 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 16), பிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று அதிகாலை (செப்டம்பர் 17), இறுதிச்சடங்கிற்காக  அவரின் சொந்த ஊரான பத்தினிப்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்