தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கணக்கிடும் அமைப்பான பிஏஆர்சி (BARC) கடந்த வெள்ளிக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட தகவலின்படி, பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் அதிகப்படியான பார்வையாளர்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக ஹிட்டடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ”பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், வெளியான நாளில் மட்டும் 204 கோடி நிமிடங்கள் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் 208 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸின் தொடக்க நாள் பார்வைகளை விட அதிகம்” என பிஏஆர்சி தெரிவித்துள்ளது.
தொடக்க வாரத்தைப் பொருத்தமட்டில் பிக்பாஸ் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகியவை முறையே 392 கோடி நிமிடங்களும், 385 கோடி நிமிடங்களும், 352 கோடி நிமிடங்களும் பார்க்கப்பட்டுள்ளன. இதனை மேற்கோள் காட்டி “பிக்பாஸ் அனைவரையும் பார்க்கிறார்; ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியா பார்க்கிறது” எனப் பதிவிட்டப்பட்டுள்ளது.
One of the most-watched shows, #BigBoss gains traction in all 3 regions. Who are you backing to win the season this time?#BARCIndia #WhatIndiaWatched #BigBoss14 #BB14 #ColorsTV #AudienceMeasurement #SalmanKhan #KamalHaasan #AkkineniNagarjuna pic.twitter.com/2SrC2GMNgc
— BARCIndia (@BARCIndia) October 23, 2020
எனினும் இது ஐபிஎல் பார்வையாளர்களை விட சற்று குறைவானதாகவே உள்ளது. கொரோனா பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கப் போட்டியை நாடு முழுவதும் 20 கோடி பார்வையாளர்கள் பார்த்ததாகவும், தொடக்க வாரத்தில் 27 கோடி பார்வையாளர்களும், 60 பில்லியன் நிமிடங்களும் பார்க்கப்பட்டதாக பிஏஆர்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 1.1 கோடி பார்வையாளர்களும் 15% நிமிடப் பார்வைகளும் அதிகமாகும்.
Viewership of IPL-13 has a smashing record with 15% growth in viewing minutes vs IPL-12. A whopping 60.6 Bn viewing minutes and 269 Mn viewers watched IPL in its opening week across 7 matches and 21 channels!#BARCIndia #WhatIndiaWatches #IPL #Viewership #AudienceMeasurement pic.twitter.com/zGa881TLJ9
— BARCIndia (@BARCIndia) October 1, 2020
இது தொடர்பாக அனைத்து மொழிகளுக்குமான பிக்பாஸ் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் எண்டமால்ஷைன் (EndemolShine) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அபிஷேக் ரேஜி, தி ஹிந்து பிஸ்னஸ் லைன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “ஐபிஎல் தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இந்தாண்டுதான் முதல்முறையாக இணைந்து நடைபெறுகின்றன; கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனைகளிலும் மன உளைச்சலில் இருந்து திசை திரும்பி, மக்கள் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள இவ்விரண்டு பொழுதுப்போக்குகளும் பெரிதும் உதவுகின்றன.
இவற்றுக்கு இடையிலான போட்டியைப் பொறுத்தவரை, பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியைத் தவிர இணையதளத்தில் (Hotstar-தமிழ், தெலுங்கு; Voot- ஹிந்தி) இலவசமாகப் பார்க்கமுடியும். ஆனால் ஐபிஎல்-ஐ தொலைக்காட்சியில் மட்டுமே அதிகபட்சம் பார்க்கமுடியும். இந்தாண்டு முதல் இணையதளத்தில் (Hotstar) பார்க்க வேண்டுமென்றால் அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஐபிஎல்-ஐ நேரலையில் பார்த்தால்தான் அதன் கேளிக்கை குறையாமல் ரசிக்க முடியும் என்பதால் அதிகம்பேர் தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள்.
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்கள் வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யங்கள் கூடி பார்வையாளர்கள் கணிசமான அளவில் அதிகமாவார்கள் என்றும், மொத்தத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது நிகழ்ச்சி வடிவிலும் பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும் சிறப்பாக இருப்பதாகவும் வரும் நாட்களிலும் அது தொடரும் என்று நம்புவதாகவும்” அபிஷேக் ரேஜி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.