Aran Sei

தண்டிக்கப்பட வேண்டியவரா ட்ரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரும் உதவியாளருமான மைகள் கோஹென் அவரது சுயசரிதையில் அவரை சிறையில் தள்ளிய அதே குற்றத்தின் குற்றவாளி ட்ரம்ப் என்று குறிப்பிட்டுள்ளார். ஹஷ் பண ஊழலில் சம்பந்தம் உள்ளது என்று சர்ச்சை எழுந்ததால் ட்ரம்ப்பின் பதவி ஆட்டம் கண்டது. இந்த சம்பவங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார் கோஹென்.

”ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைச் சரிசெய்ய நான் செய்த வேலைகளில், தனக்கும் டிரம்புக்கும் இருந்த உறவை குறித்து நடிகை ஸ்டார்மே டேனியல்ஸ் அளித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டது தான் மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது” என்று “விசுவாசமற்ற – ஜனாதிபதி டோனால்ட்.ஜெ.ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரின் உண்மை கதை” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருமதி டேனியல்ஸ் பொதுவில் இவ்விவகாரத்தை குறித்து வாய்திறக்காமல் இருக்க, அக்டோபரில், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர், 1,30,000 டாலர் தொகையை திருமதி டேனியலுக்கு வழங்கியதாக குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு முரண்பாடு இருந்தாலும், ”இந்த செய்தி வெளியே வந்தால் தன்னுடைய மனைவிக்கு, இதை விட அதிகமான தொகையளிக்க வேண்டியிருக்கும்” என்று ட்ரம்ப் கெஞ்சியதால் நான் இதை செய்ய ஒப்புக் கொண்டேன்.

நடிகை டேனியலஸும் பொதுவில் இது தொடர்பாக பேசுவதில்லை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணத்தை பெற்றுக் கொண்டார். பின்னர், அந்த பணத்தை ஜனாதிபதி தனது ’போலி சட்ட கட்டணம்’ மூலம் எனக்கு திருப்பி செலுத்தினார் என்று தனது நூலில் கோஹென் எழுத்திருக்கிறார்

“ஒருபோதும் பணம் இந்த விவகாரங்களில் சமரசம் செய்துவிடுவதில்லை., இருப்பினும் பல நண்பர்கள் பணம் செலுத்தக்கோரி ஆலோசனை அளித்தார்கள். இந்த செய்தி வெளியே வந்தால் என் ஆதரவாளர்கள் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் ஒரு கவர்ச்சி நட்சத்திரத்துடன் உறவுகொண்டிருந்ததை அவர்கள் சுவாரஸ்யமான விசயமாகவே கருதுவார்கள் ” என்று ட்ரம்ப் கூறியதாக கோஹென் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் கோஹனின் சுயசரிதையை “ஒரு விசிறியின் புனைகதை” என்று அழைத்தார்கள். “அவர் வழக்கமாகக் கூறும் பொய்யை உடனடியாக ஒப்புக்கொள்வார், ஆனால் இப்போது அவரது புத்தக விற்பனைக்காக அவரை மக்கள் நம்புவார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஜனாதிபதி ட்ரம்ப்பைத் தாக்க இந்த சோகமான, நம்பிக்கையற்ற மனிதரை ஊடகங்கள் சுரண்டுவது துரதிர்ஷ்டவசமானது,” என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் பிரையன் மோர்கென்ஸ்டெர்ன் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊடகத்தினர் இந்த புத்தகத்தின் ஆரம்ப நகலைப் பெற்றுக்கொண்டார்கள்.

நிதி மீறல்களுக்கான பிரச்சாரம், காங்கிரஸில் பொய் கூறியமை உள்ளிட்ட பிற வழக்குகளில் குற்றமச்சட்டப்பட்ட திரு. கோஹென், திரு. ட்ரம்ப் பதவியிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் மீது பதியக் கூடிய வழக்கின் “நட்சத்திர சாட்சி” என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். அவர் தனது புதிய புத்தகத்தை ஜனாதிபதியின் குற்றத்தின் “அடிப்படை ஆதாரம்” என்று விவரித்தார்.

அவர் ட்ரம்ப்பை “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் தலைவர்” என்றும் “திரிப்பதில் வல்லவர்” என்றும் தாக்கியுள்ளார். ஆனால் ஒரு காலத்தில் ட்ரம்ப்பைத் தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்த்ததாக கோஹென் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு முழு நாட்டையும் கைப்பற்றி அவரது தனிப்பட்ட நிறுவனம் போல் நடத்தும் தைரியம் படைத்தவர் என்பதால் அவரை டிரம்புக்கு மிகவும் பிடிக்கும் என்று கோஹென் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்