Aran Sei

மாயத்திரை: ஒரு பண்பாட்டுப் போர் – இரா.முருகவேள் எழுதும் தொடர்

காதல் தோல்வியால் துவண்டு போன ஒரு இளைஞன்/யுவதி தங்கள் துயரை கவிதையில் கொட்டுகிறார்கள்.

உலகின் சௌந்தரியத்தில் லயித்துப் போன ஒருவர் அதை சொற்களில் வடிக்கிறார்.

சமூகத்திலிருந்து அன்னியப்பட்டு போன ஒரு எழுத்தாளர் தன் அக உலகை கதையாகவும் நாவலாகவும் மாற்றுகிறார்.

ஒரு ஓவியர் தன் பிளவுண்ட மனதை குறியீடுகள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

இவையெல்லாம் இயல்பானவை. எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டிருப்பவை. புதியது என்னவெனில் இவை அனைத்தையும் ஒரு மர்மக் கரம் ஒருங்கிணைக்கிறது.

அந்த மர்மக் கரம், இதுதான், இது மட்டும்தான் ’இலக்கியம்’ என்று நிலை நாட்ட முயல்கிறது.

தனிமனிதர்களை சுற்றிச் சுழலும் கலைகளை , சமூக அமைப்பின் மேல் கேள்வி எழுப்பும் எழுத்துக்கு எதிராக நிறுத்துகிறது.

தனி மனித உணர்வுகள், துயரங்கள், வெறுமை, தனிமைக்கு சமூகமும் ஒரு காரணம் என்பதை மூடி மறைக்க முயல்கிறது. ஆடம்பர அரங்குகளில் இலக்கியக் கூட்டம் நடக்கிறது.

கலைக்காக உயிரை விடுவதாக அபத்தமாக நினைத்துக் கொண்டு இருக்கும் இலக்கியவாதிகளின் செயல்களை அவர்கள் அறியாமல், உளவுத்துறை தலைவர்கள் கட்டுப்படுத்தி வருகிறார்கள். இது உலகு தழுவிய போரின் ஒரு பகுதி.

சர்வதேச நாடுகளின் உளவுத்துறை சூழ்ச்சிகளும் சதிகளும் பின்னிப் பிணைந்த மர்மக் கதை

எழுத்தாளர் முருகவேள் எழுதும் தொடர்.

விரைவில்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்