Aran Sei

உலகை இணைக்கும் ‘ஜெருசலேமா’: வினோத முறையில் நடனம்

Image Credits: Cape Town ETC

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உலகிற்கு ஒரு விஷயம் வேண்டும் என்றல் அது ‘ஜெருசலேமா’ எனும் இந்தப் பாடல் தான். வியக்க வைக்கும் இந்தப் பாடல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிஜே மற்றும் தயாரிப்பாளரான மாஸ்டர் கே.ஜி (24) இசை அமைத்து வெளியாகியுள்ளது.

நோம்செபோ ஜிகோட் பாடிய இந்த ஜூலு (தென்னாப்பிரிக்க இனக்குழு) பாடல் அதிகாரபூர்வமற்ற முறையில் ‘ஆப்பிரிக்க கீதம்’ என்று பெயரிடப்பட்டு இப்போது உலகளவில் வெற்றி பெற்றுள்ளது.

அதிகாரபூர்வ பாடல் யூடியூபில் 2019-ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்டது, 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவை பெற்று, இப்போது, 16.3 கோடிக்கும் அதிகமானோர், இதைப் பார்த்திருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவைத் தாண்டி அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் இளம் அங்கோலான் குழுவினரால் #JerusalemaDanceChallenge (ஜெருசலேமா டான்ஸ் சேலஞ்ச்) என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ஒரு நடன சவால் தொடங்கப்பட்டபோது, கிறித்துவ கோஸ்பலால் தூண்டப்பட்ட இந்த பியூஷன் வகை பாடல் மேலும் பிரபலம் அடைந்தது. இந்நடன சவாலில் உலகமே பங்கெடுத்து.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள், சிறை அதிகாரிகள், துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள், லத்தீன் நடனக் கலைஞர்கள், தீயணைப்பு பாதுகாப்பு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பள்ளி மாணவர்கள் சவாலில் பங்கேற்க முன் எப்போதும் இல்லாத வெறி ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிரில் ரம்போசா பாரம்பரிய தினத்திற்கு முன்னதாக உரையாற்றும் போது, ​​‘ஜெருசலேமா’ சவாலின் உற்சாகத்திற்கு ஏற்ப வாழுமாறு தனது நாட்டு மக்களை வலியுறுத்தியபோது இந்த நடன சவாலுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்தது.

பிப்ரவரியில் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, அங்கோலாவில் உள்ள ‘ஃபெனோமினோஸ் டூ செம்பா’ என்ற நடனக் குழுவினர் ‘ஜெருசலேமாக்கு’ நடனமாடும் காணொளியை வெளியிட்டதன் மூலம் இது தொடங்கியது.

உணவுத் தட்டுகளைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் ஆடிய இயல்பான நடனம் பலரையும் ஈர்த்தது. நாட்டியமாட வைக்கும் தளமும், சுவாரஸ்யமாக இருப்பினும் எளிமையான நடன அசைவுகளும் நடனக் கலைஞர்களுக்கு தவிர்க்க முடியாததாக மாறியது.

அங்கோலாவின் லுவாண்டாவிலிருந்து தி இந்துவுக்கு பேட்டியளித்த ஃபெனோமினோஸ் டூ செம்பா குழுவை சேர்ந்த நடனக் கலைஞரும் இயக்குனருமான அடில்சன் மைசா “நாங்கள் இந்த வீடியோவை நகைச்சுவையாக உருவாக்கியுள்ளோம், இது உலகளாவிய வெற்றியை பெறும் என்றோ வீடியோ வைரலாகிவிடும் என்றோ எதிர்பார்க்கவில்லை,” என்று கூறியுள்ளார்.

“ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் இருந்தபோதிலும், வாழ்க்கை நமக்கு அளிக்கும் சிறிய விஷயங்களுடன் கூட நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்பினோம். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமாக இருப்பதுடன், சாப்பிட கொஞ்சம் உணவும், குடிக்க கொஞ்சம் தண்ணீரும் இருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருப்பது தான்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைவருக்குமான நடனம்

பொதுவாக தென்னாப்பிரிக்க திருமணங்களில் நிகழ்த்தப்படும் இந்த நடனம் உலகெங்கிலும் உள்ள நடன ஆர்வலர்களால் விரும்பப்படுகிறது. இரண்டு இடது கால்களைக் கொண்டவர்களுக்கு, பயிற்சிகள் உள்ளன.

மெல்போர்னை சேர்ந்த ஜூம்பா மற்றும் உடற்பயிற்சி நிபுணர் கெரன் கிரீன் இந்த நடனத்தின் பயிற்சி காணொளியை யூடியூப்பில் வெளியிட்டவர்களில் ஒருவர். அவரது காணொளியை உடனடியாக 20 லட்சம் பேர் பார்வையிட்டனர்.

“என் தந்தை தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர், என் அம்மா இஸ்ரேலைச் சேர்ந்தவர், எனவே நான் பாரம்பரிய ஆப்பிரிக்க நடனத்தில் ஆர்வமாக இருந்தேன். இது மக்களுக்கு விருப்பமாக இருக்கக்கூடும் என்பதையும், அசைவுகளை சரியாகக் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பாகவும் இருக்கலாம் என்பதை நான் உணர்ந்தேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டு இளம் குழந்தைகளின் தனியாக காப்பாற்றும் கெரன், அவர் பயன்படுத்திய பாடல் பதிப்புரிமை பெற்ற பாடல் என்பதால், யூடியூப் பார்வைகளை பணமாக்க முடியவில்லை எனும் வருத்தத்தில் உள்ளார். “ஆனால் மக்களிடமிருந்து நிறைய நேர்மறையான கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன, இது அழகாக உள்ளது,” என்றும் “உலகெங்கிலும் உள்ள மக்களை சென்றடைவது நெகிழ்ச்சியாக உள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச எல்லைகளைத் தாண்டிய அவர்களின் நடன சவால் குறித்து உற்சாகமாக இருக்கும் அடில்சன், “அங்கோலா சிறந்த கலாச்சாரத்தை கொண்டுள்ளது. நடனம் எங்கள் வணிகத்தின் ஒரு பகுதியாகும்,” என்றும் “ஆனால் அதை இன்னும் எங்கள் தொழிலாக மாற்ற முடியவில்லை, இது ஒரு நாள் மேம்படும் என நம்புகிறேன்,” என்றும் கூறியுள்ளார்.

‘ஜெருசலேமா’வை அதன் பிரபலத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வதில் இந்தக் குழுவின் பங்கை மாஸ்டர் கே.ஜி ஒப்புக் கொண்டுள்ளார். “அவர் இன்ஸ்டாகிராமில் எங்கள் குழுவைப் பின்தொடர்ந்து எங்களுடன் பேசுகிறார்,” என்கிறார் அடில்சன்.

“நடனம் என்பது எங்கள் ஆர்வத்தை வெளிக்காட்டுவதற்கான மற்றும் தொடர்புகொள்வதற்கான வழி. ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு நடன அசைவு உள்ளது – அது துக்கமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், நடனக் கலையின் மூலம் வெளிப்படுத்துகிறோம்,” என்று கூறிய அடில்சன் நடனக் கலைஞர்களை பற்றி இதைவிட சிறப்பாக வெளிப்படுத்தியிருக்க முடியாது.

மொழியாக்கக் கட்டுரை

நன்றி : thehindu.com

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்