Aran Sei

நவீன அடிமைப் பெண்கள்: அதிர்ச்சியூட்டும் ஐநா அறிக்கை

Image Credits: Business Today

வீன அடிமைத்தனம் அனைவர் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களில் 71% உலகெங்கிலும் உள்ள பெண்கள்தான் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது.

நவீன அடிமைத்தனம் பெரும்பாலும் பாலினப் பிரச்சினையாக இருப்பதை ‘அடுக்கப்பட்ட முரண்பாடுகள்’ (Stacked Odds) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நவீன அடிமைத்தனம் அதிகார ஏற்றத்தாழ்வுகளால் இயக்கப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் பாலினச் சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகளை அதிகரிப்பதாக அறிக்கை கூறுகிறது.

உலக அளவில் 130 பெண்களில் ஒருவர் நவீன அடிமைத்தனத்தில் இருக்கிறார். 99 சதவீதப் பெண்கள் கட்டாய பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுகின்றனர். 84 சதவீதம் பேர் கட்டாய திருமணத்தினாலும், 58 சதவீதம் பேர் கட்டாய உழைப்பாலும் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாலின பாகுபாடு காரணமாக உயர் கல்வி மற்றும் மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதில்லை. இது அவர்களை வறுமைக்குத் தள்ளுகிறது என்பதை அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

“… பெண்கள் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர். முறைசாரா தொழில்களின் ஆபத்தான துறைகளில் பணியாற்றுவதற்கும் – இறுதியில், நவீன அடிமைத்தனத்தில் – ஆண்களை விடவும் அதிகமான பெண்கள் சிக்கியுள்ளார்கள்” என்று அது விளக்கியுள்ளது.

ஐந்து உலகப் பிராந்தியத்தில் நான்கில் ஆண்களை விட அதிகமாகப் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் (73 சதவீதம்), ஆப்பிரிக்கா (71 சதவீதம்), ஐரோப்பா, மத்திய ஆசியா (67 சதவீதம்), அமெரிக்கா (63 சதவீதம்) என ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் நவீன அடிமைத்தனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே நவீன அடிமைத்தனத்தின் ஏற்றத்தாழ்வான ஆபத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இப்போது அதிகமாக உள்ளது என்று கூறி, தப்பிப்பிழைத்தவர்களை முடிவெடுப்பதில் ஈடுபடுத்தி அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்து, அவர்களின் வாழ்கை அனுபவத்தைப் பயனுள்ளதாக மாற்றுவதின் மூலம்தான் தீர்வை எட்ட முடியும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

“நவீன அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம், மனித உரிமைகளில் மிக அடிப்படையான சுதந்திரத்தை மக்களுக்கு உறுதி செய்வதாகும்,” என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.

சமத்துவத்தின் இலக்கை அடைய தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு சர்வதேச மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அரசாங்கங்கள், நம்பிக்கையான தலைவர்கள் மற்றும் வணிகத் துறையை வலியுறுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயல் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறும் ஆறு புள்ளிகளை இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, அனைத்து நாடுகளிலும் குழந்தை திருமணத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அனைத்து வகையான நவீன அடிமைத்தனத்தைக் குற்றங்களாக்க வேண்டும். பெண்களின் உரிமைகளை அகற்றும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் திருத்தவும் அறிக்கை பரிந்துரைத்தது.

பெண்களின் உரிமைகளை அகற்றும் அல்லது பாலியல் வன்முறை மற்றும் சுரண்டலுக்கான பாதிப்பை அதிகரிக்கும் சட்டங்களையும் கொள்கைகளையும் முறியடிப்பதை இது உறுதிப்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பரம்பரை உரிமைகள், நில உரிமைச் சட்டங்கள், புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் கஃபாலா முறை, தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக விநியோகச் சங்கிலி வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நெருக்கடி சூழ்நிலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் உட்பட பெண்கள் அனுபவிக்கும் பாதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் தீர்வு காண்பதற்கும் குறிப்பிட்ட நடவடிக்கை எடுப்பது ஆகியவை அடங்கும்.

பாலினம், நவீன அடிமைத்தனத்தின் ஆபத்து, மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் வரவு செலவுத் திட்டங்களில் உள்ள தெளிவான தொடர்பை அரசாங்கங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. இந்தச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் மூலம்தான் நாம் உண்மையான பாலினச் சமத்துவத்தை அடைவோம். அவ்வாறு செய்யும்போது, ​​உலக மக்கள்தொகையில் பயன்படுத்தப்படாத திறனைத் திறக்க முடியும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்