Aran Sei

வனவிலங்கு நிறுவனத்துக்கு மத்திய அரசின் நிதி நிறுத்தம் – விஞ்ஞானிகள் கவலை

த்திய வன நிறுவனங்களில் இருந்து விலகும் முடிவு சாத்தியமற்றது என்று இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) இயக்குனர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆஷுதோஷ் ஜிண்டல் வெளியிட்ட அறிவிப்பில், சுற்றுச்சூழல்-வனவிலங்கு-வனம் சம்பந்தப்பட்ட முதன்மையான ஐந்து நிறுவனங்களின் செயற்பாடுகளில் இருந்தும், நிதியளிப்பதில் இருந்தும் படிப்படியாக விலக உள்ளதாக அறிவித்திருந்தார்.

மத்திய நிதித்துறை அமைச்சகத்துடைய, இந்தப் பரிந்துரைகளின் படி, படிப்படியாக மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு, அந்நிறுவனங்களிலிருந்து வெளியேறும். ஆண்டுக்கு 25 சதவீத நிதியைக் குறைத்துக்கொண்டே வரும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கீழ் இயங்கும் 16 தன்னாட்சி நிறுவனங்களைப் பரிசீலித்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த முடிவிற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்புகளில் ஒன்றான டெஹ்ராடூனை உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் (WII) சேர்ந்த விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) இயக்குனரான தனஞ்சய் மோகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த உத்தரவு நடைமுறை சாத்தியமற்றது என்று எழுதியுள்ளார்.

இதற்கு முன் வளர்ச்சித் திட்டங்களின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, பக்கச்சார்பற்று இயங்க, அரசு மற்றும் பொதுத்துறை அமைப்புகள் இணைந்து ஆலோசனை நடத்தும். ஆனால் இந்த முடிவு, நிறுவனத்தின் இந்தப் பக்கச்சார்பற்று இயங்கும் திறனைப் பாதிக்கும்  என்று கடிதத்தில் எழுதியுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தகவல்படி, இந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.34 கோடி செலவாகிறது. அதில், அரசு சாரா பிற வழிகளிலிருந்து ரூ.3.5 கோடியை மட்டுமே ஈட்டியது. இது 2004-ம் ஆண்டிற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குச் செலவிப்பட்டது.

”நாட்டின் வனவிலங்கு மற்றும் வனம் சார்ந்த வளங்கள் தொடர்பான, கொள்கைகள்குறித்து அறிவியல் தகவல்களின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குவதே இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாகும். இந்த நிறுவனம் அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வரை மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும்.” என்று நிறுவன இயக்குனர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : english.mathrubhumi.com

மேலும், பெயர் சொல்ல விரும்பாத அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி, 112 ஊழியர்களை கொண்ட நிறுவனத்தை இழுத்து மூட வைக்கும் என்று கூறியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனமும் போபாலில் உள்ள இந்திய வன வேளாண்மை நிறுவனமும் 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. அங்குப் பயிற்சி, ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மத்திய நிதித்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள இத்திட்டத்தில் டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம், போபாலில் உள்ள இந்திய வன வேளாண்மை நிறுவனம், பெங்களூருவில் உள்ள இந்திய ஒட்டுப்பலகைத் தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னையில் உள்ள சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி மையம் போன்ற நிறுவனங்கள் இதனால் பாதிப்படையும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்