Aran Sei

‘கொரோனா சூழலைப் பயன்படுத்தி நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் கண்டனம்

நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை இந்திய ஒன்றியத்தின் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சிபிஎஸ்இ பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

நீட் நுழைவுத்தேர்வால் இதுவரை நிகழ்ந்த உயிர்ப்பலிகள்

இதுகுறித்து, இன்று (ஜூன் 2), சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில், தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை ஒன்றிய அரசின் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று ஒன்றிய அரசை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்