Aran Sei

புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு: மாற்றாந்தாய் மனப்போக்கை பாஜக வெளிப்படுத்துவதாக ஸ்டாலின் கண்டனம்

புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாநில அரசின் கல்வி உரிமைகளை முழுமையாகப் பறித்து, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் சமவாய்ப்பற்ற புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து கல்வியாளர்கள் எதிர்ப்பும் எச்சரிக்கையும் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனுக்கு எதிரான இந்தப் புதிய கல்விக் கொள்கை இந்தி – சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு வழிவகுப்பதால், இக்கொள்கையைத் தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வந்துள்ளது.” என்று நினைவூட்டியுள்ளார்.

தமிழைத் தவிர்த்து பிற மொழிகளில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவு – தமிழைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் பன்முகத்தன்மைக்கு எதிராகவும் உள்ள புதிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, அக்கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும் பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் உருது உள்ளிட்ட அட்டவணையில் உள்ள மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பாடத்திட்டத்தில் இந்துத்துவத்தை திணிக்கும் பாஜக’ – வைகோ கண்டனம்

“புதிய கல்விக் கொள்கை  பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ள மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதுடன், மாநில உரிமை – மொழி உணர்வு – மாணவர் எதிர்காலம் இவற்றுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்