Aran Sei

இட ஒதுக்கீடு மறுப்பு: ’அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது ஏன்?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

ண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக்  படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது ஏன் என்று நாளை (பிப்பிரவரி 2)  விளக்கமளிக்கும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இதை எதிர்த்து இப்படிப்பிற்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

’மறுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக 69 சதவீத இடஒதுக்கீடு; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்’ – கி.வீரமணி

அந்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டதாகவும்,   தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது .

“தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால்,  2020-2021-ஆம் ஆண்டில்  இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது.” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

மேலும், எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இன்று (பிப்பிரவரி 2), இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்த போது, தற்போது பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட  அறிவிப்பில், மாநில அளவிலான இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் என கூறியுள்ளதாகவும், படிப்புகளை ரத்து செய்துள்ளதால் 45 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

இது குறித்து  விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக பல்கலைக்கழகம் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன்? என்று நாளை (பிப்பிரவரி 2)  எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்