Aran Sei

’10 ஆம் வகுப்பில் எல்லோரும் தேர்ச்சி; கூடுதல் மதிப்பெண் பெற தேர்வெழுதுங்கள்’ – பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு

மிழக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் தேர்வு ஒன்றை நடத்தவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக, தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண் அளித்துத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் உயரும் வறியவர்களின் எண்ணிக்கை – பி.இ.டபல்யூ ஆய்வில் தகவல் – மீளுமா இந்தியா?

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 20), பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரு பொதுத்தேர்வு ஒன்றை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மக்களை கொலை செய்யும் பாஜக அரசே வரலாறு உங்களை மன்னிக்காது’- நடிகர் சித்தார்த்

அதன்படி, அரசு வழங்கியுள்ள 35 மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண்களை வாங்க விரும்பும் மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்களுக்கு 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்