Aran Sei

மத்திய அரசு நிறுவனங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு – ஸ்டாலின் கடும் கண்டனம்

த்திய அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயர் மருத்துவ படிப்புகளான எம்.டி., எம்.எஸ் போன்ற படிப்புகளில் சேர INI-SET (இனி-செட்) என்ற தனி நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது: நடிகர் சூர்யா

நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சில மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில மாநில அரசுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கடந்த 5 ஆண்டுகளாக நீட் தேர்வு நடந்து வருகிறது.

நீட் மரணங்கள் – கூட்டு மனசாட்சியின் தோல்வி – சீ.நவநீத கண்ணன்

நாடு முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கொரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்றது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட் தேர்வை நடத்தியது.

 

“கோச்சிங் கிளாஸ் போகலனா நீட்ல தேறியிருக்க மாட்டேன்” – ஜீவித்குமாருடன் நேர்காணல்

இந்நிலையில், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 மத்திய அரசின் கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து, ‘INI-SET’ எனும் பெயரில் தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தவுள்ளது.

‘நீட் தேர்வு முடிவுகளில் ஏன் இத்தனை குளறுபடிகள், குழப்பங்கள்?’- மு.க.ஸ்டாலின் காட்டம்

அக்கல்லூரிகளில் முதுகலை (PG Courses MD, MS, DM (3 years), MCH (6 years), MDS) பயில நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது  . நீட் தேர்வைத் தேசிய தேர்வு முகமை நடத்தும், ஆனால் இனி-செட் தேர்வை எய்ம்ஸ் நடத்தவுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தொடரும் துரோகங்கள்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். அதில், மருத்துவ உயர் சிறப்புப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்இடஒதுக்கீடை போராடிப் பெற்றோம். அரசாணை வெளியிட்டு 10 நாட்கள் கடந்தும் கலந்தாய்வு நடத்த தாமதிப்பது யாருக்கு பயந்து? தமிழக இட ஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் 50 சதவீதத்திற்கான கலந்தாய்வை உடன் நடத்திடுக.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசு 11 கல்வி நிறுவனங்களுக்கு என்ன காரணம் கொண்டு விலக்கு கொடுத்திருந்தாலும், அது முதலிலே விலக்கு கொடுத்திருக்க வேண்டியது தமிழகத்திற்குத்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வால் இதுவரை நிகழ்ந்த உயிர்ப்பலிகள்

மேலும், ”மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக இரண்டு சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான். ஆனால் அவற்றை எந்தக் காரணமும் சொல்லாமல் குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார்.” என்று கூறியுள்ளார்.

“தமிழகத்தின் நலனையும், குரலையும்  தொடர்ந்து புறக்கணிக்கிற மத்திய அரசுக்கு எதிராக எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் ” என நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் குணசேகரன், தனது முகநூல் பக்கத்தில், ’ஒரு நாடு; இரண்டு தேர்வு!’ என்ற தலைப்பில் தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “நீட் பி.ஜி. என்ற தேர்வு நடத்தப்படும் நிலையில், மத்திய அரசின் 11 கல்லூரிகளுக்கு மட்டும் தனித்தேர்வு ஏன்? யாருடைய நலனுக்காக? கொரோனா உயிர் காப்பில், ஆராய்ச்சியில் இந்த நிறுவனங்களின் பங்கு என்ன? தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சீர்மிகு நிறுவனங்கள் என்ற சிறப்புத்தகுதி எந்த அடிப்படையில் 11 நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தமிழக அரசின் நிதியில் நடத்தப்படும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட கல்லூரிகள் எந்த வகையில் தேசிய சிறப்பு தகுதி பெற குறைந்தவை? எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்போர், அங்கேயே மேற்படிப்பு தொடர வழங்கப்படும் Institutional Quota தொடரும் என அறிவிப்பது அநீதியானது அல்லவா? பிறரது வாய்ப்பை மறுக்கும் சுயநலம் அல்லவா?” என்று  ஊடகவியலாளர் குணசேகரன் கண்டித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்