Aran Sei

‘தமிழ்நாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் இல்லையென்பது தமிழுக்கு செய்யும் துரோகம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

செம்மொழியான தமிழ் மொழியை மேடைதோறும் புகழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் இல்லை என்று ஆணை பிறப்பித்து இருப்பது தமிழுக்கு செய்யும் துரோகம் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூலை 9), எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசின் கீழ் 49 கேந்திர வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2013-2014 கல்வி ஆண்டிலிருந்து இப்பள்ளிகளில் தமிழ்மொழி விருப்பப் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் தாய்மொழியான தமிழ்மொழியில் கற்பிக்க இயலாது என்றும் சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

’தமிழ் கற்பிக்காத கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு’? – வைகோ

செம்மொழியான தமிழ் மொழியை மேடைதோறும் புகழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் இல்லை என்று ஆணை பிறப்பித்து இருப்பது மோசடியாகும் என்றும் இது தமிழுக்கும் தமிழர்களின் கல்வி உரிமைக்கும் செய்யும் பச்சைத் துரோகம், படுபாதகச் செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு மட்டுமே அக்கறைக் காட்டுகிறது. மத்திய அரசால் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிற பள்ளிக்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நடத்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு தான் ஊதியம் வழங்குகிறது. இந்நிலையில் தமிழ் ஆசிரியர்களை நியமித்து கற்பிக்க மறுப்பது என்பது மிகப்பெரிய கயமைத்தனம்.” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

தமிழகத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமித்து தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்