Aran Sei

’மறுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக 69 சதவீத இடஒதுக்கீடு; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்’ – கி.வீரமணி

ண்ணா பல்கலைக்கழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க மறுப்பதோடு, உதவித் தொகை பெறும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எதிர்காலத்தையும் பாஜக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது கண்டனத்துக்குரியது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாஜக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தை தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மாணவர் சேர்க்கையில் தற்போதுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முடியவில்லை. ஆய்வு மாணவர்களுக்கு (எம்டெக் பயோடெக்னாலஜி, எம்டெக் கம்ப்யூட்டெஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும்) 2020-21-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாமல் இருக்கிறோம் என அண்ணா பல்கலைக்கழக உயர் தொழில்நுட்பத் துறை அறிக்கை வெளியிட்டிருப்பதே இதற்கு ஆதாரமாகும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

`இதுதாய்யா மநு நீதி’- இட ஒதுக்கீடு பிரச்சனையில் வலுக்கும் கண்டனங்கள்

பாஜக அரசு, 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க மறுப்பதோடு, உதவித் தொகை பெறும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது என்று  கி.வீரமணி கூறியுள்ளார்.

“முதல்வர் தலையிட்டு, இவ்வாண்டும் உயர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடரும்படி ஏற்பாடுசெய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்