Aran Sei

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

டந்த பிப்ரவரி மாதம், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குத் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புகாரளித்தார்.

அந்த புகாரில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதும் உறுப்புக் கல்லுாரிகளின் நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் ஆகிய இருவரும் “அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை நியமிக்க ஒவ்வொருவரிடமும் 13 முதல் 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

அத்துடன், அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு, மகளைப் பணியில் சேர்த்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த நிலையில் சூரப்பாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

`சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்தாரா’ – விசாரணை தொடக்கம்

சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என விசாரணைக் குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதை தொடர்ந்து, சூரப்பா உடனடியாகப் பதவி விலகக் கோரி எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலரும் வலியுறுத்தினார்கள்.

“சூரப்பாவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் என்ன?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்நிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன். யாரோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு எழுதிய மொட்டைக் கடிதாசியின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா?  என்று காத்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்திருப்பீர்களா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘முதல்வர் வேட்பாளராக சூரப்பாவும் போட்டியிடுகிறாரோ?’: உதயநிதி

மேலும், ”உயர்கல்வித்துறை அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டு தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டை விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, பால்வளத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்களும், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே. அதை விசாரித்து விட்டீர்களா?” என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை என்றும் கரைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

“தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இல்லையே!” – உயர் நீதிமன்றம் வேதனை

“தமிழக பொறியியல் கல்வியை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்று முயன்றவர்.” என்று சூரப்பாவை குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, கல்வியாளர் மற்றும் பேராசிரியர் பா.சிவகுமாரிடம் அரண்செய் பேசிய போது, “தமிழக அரசையும்,  நிதி குழுவையும், ஆட்சி குழுவையும் கலந்தாலோசிக்காமல், தானே 300 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று எப்படி தன்னிச்சையாக ஒரு துணைவேந்தரால் கடிதம் எழுத முடியும் என்று தெரியவில்லை” என்று கூறினார்.

`பேட்டி கொடுப்பதைவிட மத்திய அரசுக்குக் கடிதத்தில் வலியுறுத்த வேண்டும்’: மு.க ஸ்டாலின்

”துணைவேந்தராக அவர் (சூரப்பா) வந்த பின், பகவத் கீதை, நீதி சதகம் போன்ற இந்துத்துவ கருத்துகளை புகுத்தக்கூடிய பாடங்களை சேர்த்தார். இது எப்படி தமிழக பொறியியல் கல்வியை மேம்படுத்தும்? இதை ஆதரிப்பதன் மூலம் பாஜக-வின் இந்துத்துவ கருத்துகளுக்கு கமல்ஹாசன் ஆதரவாக இருக்கிறாரா?” என்று சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

மேலும், “கல்வியில் ஊழல் என்பது பணம் வாங்குவது, கொடுப்பது மட்டுமல்ல, தன்னுடைய மகளை அறிவுசார் சொத்துரிமை துறையில், கௌரவ பேராசிரியராக நியமித்ததும் அறநெறியற்ற ஊழல் தான்” என்று அவர் கூறினார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் புறக்கணிப்பு – ஆர்டிஐ தகவலில் அம்பலம் – நவநீத கண்ணன்

முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் உட்பட கல்வியாளர்கள் கையெப்பம் இட்டு வெளியிட்ட அறிக்கையில், இதை பற்றியெல்லாம் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் என்றும் மத்தியில் ஆளும் பாஜக-வின் ஏஜெண்ட்டை போல செயல்படும் சூரப்பா, பதவி விலக வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கை என்று பேராசிரியர் பா.சிவகுமார் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்