Aran Sei

ஆன்லைன் வகுப்பிற்காக மலையேறும் காஷ்மீர் மாணவர்கள்

ம்மு காஷ்மீர் எல்லை கிராமமான லாட்டூவில் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்காக இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று மலைஏறி படிக்கின்றனர். மாணவர்கள் கார்கில் மாவட்டத்தில் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று மலை ஏறி படித்து வந்த பிறகு மாணவர்கள் கொடுக்கும் தகவல்களைக் கொண்டே மாணவிகள் படிக்க இயலும் என்கிற நிலை உள்ளது . வளரிளம் காலத்தில் இத்தனைப் பாடுகளைத் தாங்கியே கல்விப் பெற வேண்டிய நிலை. இந்த நிகழ்வின் வழியே இந்தியாவில் உள்ள பிற குக்கிராமங்களின் நிலையை யூகித்தறிய அறிய முடியும். உள்கட்டமைப்பை மேம்படுதாமல் நிகழ்த்தப்படுகின்ற மாற்றங்கள் மக்களுக்குச் சுமையாகவே இருக்கும். ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரும் துன்பம் அடைந்துள்ளனர்.

ஷிங்கோ நதிக்கரையில் அமைந்துள்ள கிராமம் லாட்டூ 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் படைகள் ட்ரெய்லொங் எனும் ஊரை கைப்பாற்றி தங்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தபோது இந்தியப் படை கைப்பற்றிய இடம்தான் லாட்டூ. மாவட்ட தலைநகரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தூரத்தில்தான் லாட்டூ கிராமம் அமைந்துள்ளது.

“சரியான சாலை வசதி இல்லை, தண்ணீர் வசதி இல்லை,போர் நடந்த இடம் என்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறோம் . பல்வேறு பிரச்சனைகள் உள்ளது இணையம் எங்களுடைய குறை பட்டியலில் இல்லை” என்று கிராமத்தலைவரில் ஒருவரான அஸ்கர் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும்போது ” மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து கையில் செல்போனிகளோடு சிக்னலுகாக சுற்றித்திரிவது பெரியவர்களான எங்களுக்கு வேதனை அளிக்கிறது” என்றார்.

“எங்கள் பெற்றோர் எங்களை உத்தாலோவுக்குச் செல்ல அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள், ஏனென்றால் அந்த பகுதியில் இராணுவ இருப்பு உள்ளது.பெரும்பாலும் மக்கள் வசிக்காத பகுதி அது. உத்தாலோவுக்கான பாதை எளிதானது அல்ல, எந்தவிதமான கவனக்குறைவும் ஆபத்தானது.எங்கள் பெற்றோரின் அச்சங்களை நாங்கள் மதிக்க வேண்டும்.” என்று ஒன்பதாவது படிக்கும் நிஸ்சா அச்சமுடன் தெரிவித்தார்.

இரண்டு கிலோமீட்டர் பயணித்து பின்னர் மலையேறி ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டு , பிறகு திரும்பி வந்து மாணவிகளுக்குக் கற்பிக்க வேண்டும் .இது எங்களை மிகுந்த சோர்வாக்குகிறது. எங்கள் கிராம நன்மைக்காக இதை நாங்கள் செய்யவேண்டும்” என்கிறார் மாணவர் இம்தியாஸ்.

“சில நேரங்களில் எங்கள் வகுப்பின் வாட்ஸ்அப் குழுவில் உள்ள ஆசிரியர்கள் வகுப்பு நேரங்களை மாற்றுவார்கள் அல்லது சில பணிகளை வழங்குவார்கள். எங்களால் எப்போதும் உத்தாலோவின் உச்சியில் இருக்க முடியாது, மேலும் கிராமத்திற்கு இணைய இணைப்பு இல்லை என்பதால், நாங்கள்வகுப்பைத் தவறவிடுகிறோம் அல்லது சரியான நேரத்தில் பணிகளைச் சமர்ப்பிக்கத் தவறிவிடுகிறோம், ”என்று மாணவர் இப்திகார் மேலும் கூறுகிறார்.

மேலும், அவர் உத்தாலோவின் உச்சியை அடைந்த பிறகும் இணைய வேகம் மிகவும் மோசமாக உள்ளது. விரிவுரையை தெளிவாகப் புரிந்து கொள்ள நாங்கள் நிறைய போராடுகிறோம். இனைய வேகம் மிகமோசமாக உள்ளது , ஒரே நேரத்தில் வகுப்பில் கலந்துகொண்டு ஒரே தொலைபேசியில் ஆய்வுப் பொருட்களைப் பதிவிறக்க முடியாது. நாங்கள் விரிவுரைகளில் கலந்து கொள்ளும்போது படிப்புப் பொருட்களைப் பதிவிறக்கம் செய்ய மற்றொரு தொலைபேசியை வைத்திருக்க வேண்டும்”என்கிறார் இப்திகர்.

“மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களும் தங்களை புதுப்பித்துக் கொள்ள இணையம் வசதி தேவை. நான் புதிய விஷயங்களையும் புதிய கற்பித்தல் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள உத்தாலோவுக்குச் செல்கிறேன், இதனால் எனது கற்பித்தல் கற்றல் செயல்முறை மிகவும் பயனுள்ளதாக அமையும் ”என்கிறார் ஆசிரியர் ஹுசைன்.

லாட்டூ கிராமத்தில் ஒரே ஒரு நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளது. லாட்டூவைச் சேர்ந்த மொஹமட் உசேன் 20 கி.மீ தூரத்தில் உள்ள மற்றொரு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இணையத் தொடபுக்கு லாட்டூ கிராமத்தில் ஒரே ஒரு நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளது. லாட்டூவைச் சேர்ந்த மொஹமட் உசேன் 20 கி.மீ தூரத்தில் உள்ள மற்றொரு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இணையத் தொடர்புக்கு அவர்தான் உதவி செய்கிறார்.

ஹுசைன் ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அதனால் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே அவரால் கற்பிக்க முடிகிறது. கிராமத்தின் உயர்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள உத்தாலோவில் எல்லா நேரமும் இருக்கிறார்கள், படித்த கிராமவாசிகளால் உயர்கல்வி கற்பிக்க முடிவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

“மார்ச் மாதத்தில் கிராம நிர்வாகம் ஆசிரியர்களைத் தங்கள் சொந்த கிராமங்களில் தங்கி ஆன்லைன் வகுப்புகளை கற்பிக்கச் சொன்னது. கிராமத்திற்கு இணையம் இல்லாததால், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது சாத்தியமில்லை, எனவே படித்த கிராமவாசிகளுடன் இனைந்து வகுப்புகளைத் தொடங்கியதாக ” ஹுசைன் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ” எங்கள் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் என்று அரசின் உதவியை நாடாமல் தற்காலிக மூன்று கிலோமீட்டர் சாலையை நாங்கள் கட்டினோம். ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அது இன்னும் போதுமானதாக இல்லை, இந்தச்சாலை பெரும்பாலும் குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும், ”என்கிறார் லைலா பானூ

ஊரடங்கு காலத்தில் மட்டுமல்ல எல்லா நேரத்திலும் மாணவர்களுக்கு இணையம் தேவைப்படுகிறது. கடுமையான குளிர் காலத்தில் வெப்பநிலை –20 டிகிரி செல்சியஸ் வரை குறையும் போது உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் கார்கிலில் தங்க வேண்டும் அல்லது குளிர்காலம் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும். குளிர் காலங்களில் கிராமத்தை பிரதான சாலையுடன் இணைக்கும் மூன்று கிலோமீட்டர் சாலை பல வாரங்களாக கடும் பனியால் தடுக்கப்படுகிறது மாணவர்கள் நலன் கருதி இணைய வசதி செய்து தரவேண்டும்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்