Aran Sei

‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு

பீகாரின் பிராந்திய கிளைமொழிகளான போஜ்புரி, மைந்தாலி, மாகஹி ஆகியவை, அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிற்று மொழியாக இருக்கும் என்று, பீகார் கல்வித்துறை அமைச்சர் விஜய் சவுத்ரி அறிவித்துள்ளார்.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களைப் புரிந்துகொள்வதை எளிதாக்கும் நோக்கில், போஜ்புரி, மைந்தாலி, மாகஹி, வஜ்ஜிகா மற்றும் அங்கிகா ஆகிய ஐந்து பிராந்திய மொழிகளில் பாடங்களைக் கற்பிக்க, பீகார் அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று (மார்ச் 3), பீகார் மாநில சட்டசபையில், கல்வித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய விஜய் சவுத்ரி, “மகாத்மா காந்தி மற்றும் எழுத்தாளர் பனிஷ்வர்நாத் ரேணுவின் கொள்கைகளை பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் இப்போது இந்தியை தவிர்த்து, உள்ளூர் பிராந்திய மொழிகளில் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கல்வியை மறு வார்ப்பு செய்தல் – வீதிகளின் யதார்த்தங்களை வகுப்பறைகளுடன் இணைத்தல்

இந்த நடைமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களை எளிமையாக புரிந்துகொள்ள உதவும் என்று குறிப்பிட்டுள்ள விஜய் சவுத்ரி, “அவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதனால், அவர்களின் அடிப்படை அறிவும் வலுப்பெறும்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின்  செய்தியில், பீகார் மாநில கிராமப்புறங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் போஜ்புரி, மைதாலி, வஜ்ஜிகா, மாகஹி மற்றும் அங்கிகா ஆகிய ஐந்து பிராந்திய மொழிகளில்தான் உரையாடிக்கொள்கிறார்கள் என்றும் அம்மாநில கல்வித் துறையின் அறிவிப்பின் படி, மாநிலம் முழுவதும் உள்ள 42,573 அரசு தொடக்கப் பள்ளிகளில், இந்த ஐந்து பிராந்திய மொழிகளில் கற்பித்தல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பூஜ்ஜியம் கல்வியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் – கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எச்சரிக்கை

போஜ்புரி மொழி பேசப்படும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போஜ்புரி மொழியிலும், மிதிலாஞ்சல் பிராந்தியத்தில், மைதாலி மொழியிலும் கற்பித்தல் நடைபெறும் என்றும், இந்த கற்பித்தல் திட்டத்தை செயல்படுவதை உறுதி செய்யுமாறு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அமைச்சர் விஜய் சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்