Aran Sei

இறுதி செமஸ்டர் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்

`இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்’ என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைந்தன.

இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை தொழிற்நுட்பக் காரணங்களால் சில மாணவர்கள் எழுதவில்லை. எனவே, அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

‘பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் பெறாத தனியார் கல்லூரிகளுக்கும் இணைய வழியில் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. அனைத்து முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கும் நவ.17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். இணையவழித் தேர்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்சினை காரணமாகத் தேர்வை எழுதாத மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்” என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்