Aran Sei

மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் தமிழ்ப் பாடம் கட்டாயம் – திமுக தேர்தல் அறிக்கை

ரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ‘டேப்’ (TAB) எனப்படும் கைக்கணினி வழங்கப்படும் என்றும் மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்புவரை தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 13) வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில்,  “மாணவர்களுக்குக் காலையில் பால் வழங்கப்படும். அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கைக்கணினி  வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வைஃபை(WI-FI) வசதி செய்து தரப்படும். மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்புவரை தமிழ்ப் பாடத்தைக் கட்டாயப் பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் – திமுக தேர்தல் வாக்குறுதி

மேலும், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும் என்றும் ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்