Aran Sei

’தனியாருக்கு இணையாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம்’ – கட்டண குறைப்பு கோரி மாணவர்கள் போராட்டம்

டலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல்மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தை, தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வலியுறுத்தி மருத்துவர்களும், கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் இணைந்து, போராட்டத்தை நடத்தியுள்ளன.

அரசு மருத்துவர்களுக்கு துரோகம் செய்த அதிமுக – ஸ்டாலின் கண்டனம்

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு பல்மருத்துவக் கல்லூரி மற்றும் ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களின் கல்வி கட்டணத்தை, தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைத்திட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டத்தில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, மாணவர்களின் பெற்றோர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

தமிழக மருத்துவக் கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநிலத்தவர்கள் எப்படி நுழைந்தனர் ? – ஸ்டாலின் கேள்வி

பேராட்டம் இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவிந்திரநாத்திடம் அரண்செய் பேசியபோது, “கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பொது மருத்துவப்படிப்பான, எம்பிபிஎஸ் கல்வி கட்டணம், ஆண்டுக்கு ரூ.5,40,00. முதுகலை கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூ. 9,60,000. ஆனால், பிற அரசு கல்லூரிகளில், இளங்கலை மருத்துவப்படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.13,600 தான். முதுகலை படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.25,000. இளங்கலை பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.10,600. ஆனால், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில், தனியார் கல்லூரிகளுக்கு இணையாக, இளங்கலை படிப்பிற்கு ரூ. 5,40,000, முதுகலைக்கு ரூ.9,60,000 வசூல் செய்கிறார்கள்.” என்று கல்வி கட்டண வேறுபாட்டை பட்டியலிட்டார்.

மருத்துவக்கல்வி : சமூக நீதிப் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல்

“இந்த கல்வி கட்டணத்தை மாணவர்களால் செலுத்த முடியவில்லை. அதனால், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளை போல இங்கேயும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலியுங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், “தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மட்டும் இன்னும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடனேயே உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம், உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் வருகிறது. ஆனால் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவத்துறையின் கீழ் வரும். இதனால் கடலூர் மருத்துவக் கல்லூரிக்கு பல குழப்பங்கள் வருகிறது.” என்று ரவிந்திரநாத் சுட்டிக்காட்டினார்.

`சித்த மருத்துவத்திற்கு மத்திய, மாநில அரசு என்ன செய்தது?’- உச்ச நீதிமன்றம்

2014 ஆம் ஆண்டு முதல், பல போராட்டங்கள் நடத்தியுள்ளதாகவும் “இந்த விவகாரம் பற்றி அமைச்சர்களையும், எதிர்கட்சி தலைவரையும் பல முறை பார்த்து விட்டோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.” என்றும் மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்