Aran Sei

சத்தீஸ்கர் – ‘பள்ளி மாணவர்களுக்கு பாடமாக அரசியலமைப்பு சட்டம்’

ள்ளி மாணவர்களுக்கு எதிர்வரும் கல்வியாண்டில் இருந்து இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த பாடத்தை இணைக்க காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலானது (எஸ்சிஇஆர்டி) தொடங்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசியலமைப்பு குறித்த தனி பாடப்புத்தகங்களை உருவாக்கியுள்ளது.

சட்டப் படிப்பில் நுழைவுத் தேர்வு : ‘சமூக நீதியை வேரோடு அறுத்தெறியும் செயல்’ – வைகோ கண்டனம்

இத்திட்டம் குறித்து பேசிய அம்மாநில பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அலோக் சுக்லா, “சத்தீஸ்கரில் இது போன்று முன்னெடுப்பு நடப்பது முதல் முறையாகும். தொடக்க, நடுத்தர, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக புத்தகங்களை வெளியிடுகிறோம்.  இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளையும், முக்கிய மதிப்பீடுகளையும் இப்புத்தகங்கள் உள்ளடக்கியிருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிகளும் வரைப்படங்களும் நம்முடைய அரசியலமைப்பின் ஆன்மாவை எளிதில் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவும் என்றும் அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் இப்பாட புத்தகங்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

‘போஜ்பூரி உட்பட 5 பிராந்திய மொழிகள் தொடக்க கல்வி’ – இந்திக்கு மாற்றாக பீகார் அரசு அறிவிப்பு

இந்திய அரசியலமைப்பையும் அது உருவான வரலாற்றையும் அடிப்படை கட்டமைப்பையும் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கும், அவற்றை குறித்து விவாதிப்பதற்கு, நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசு நம்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்