Aran Sei

‘+2 இறுதி மதிப்பெண்ணை முடிவு செய்யும் தமிழ்நாடு அரசின் வழிமுறைகள் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

ணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும் அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் இறுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுமானால் அது கிராமப்புற மாணவர்களையும், பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூன் 6), அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று இரண்டாம் அலை கடுமையாக இருக்கும் சூழலில் +2 தேர்வு உடனடியாக நடத்த முடியாது என்ற முடிவு சரியே. ஆனால் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வினாக்களை எளிமையாகவும் குறைவான எண்ணிக்கையிலும் அமைத்து 1.30 மணி நேரத் தேர்வாக நடத்த முடிவெடுத்திருக்க வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

சித்தா, யுனானி, செவிலியர் கல்வி படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்க – தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

“இறுதித் தேர்வு கைவிடப்பட்ட நிலையில் எவ்வாறு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய வல்லுநர் குழு அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும் அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் இறுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுமானால் அது கிராமப்புற மாணவர்களையும், பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இன்னொரு புறம் இந்திய அரசு மருத்துவம் உள்ளிட்ட உயர் நிலை கல்விக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறது. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு அமர்ந்தவர்களில் கணிசமானவர்கள் இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலாகவும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக் கொண்ட பழைய மாணவர்களாகும். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியத் தலைமை அமைச்சருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்த வேண்டாம் என கேட்டுகொண்டிருப்பது. எந்த அளவிற்கு பயன்விளைக்கும் என்பது கேள்விக்குறியே.” என்று கி. வெங்கட்ராமன் குறிப்பிட்டுள்ளார்.

‘நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்களை கொரோனா தாக்காதா?’ – வைகோ கேள்வி

“இது போதாதென்று கல்லூரி கல்விக்கும், அனைத்திந்திய நுழைவு தேர்வுகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறன. இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கருத்தில் கொண்டால் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து +2 தேர்வை எளிமையான முறையில் நடத்துவதே சரி என்ற முடிவுக்கு வர முடியும். எனவே தமிழ்நாடு அரசு தமது முடிவை மறு ஆய்வு செய்து மூன்று மாதங்கள் கழித்து +2 இறுதித் தேர்வை உரிய பாதுகாப்புடன் நடத்த முன்வரவேண்டும்.” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கி. வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்