Aran Sei

‘மாணவ சமுதாயத்தின் அகதிகள் நாங்கள்’ – பட்டய கணக்காளர் தேர்வர்

ட்டயக் கணக்காளர் (Chartered accountant CA ) படிப்புக்கான தேர்வுகள் இந்தியா முழுவதும் நவம்பர் மாதத்தில் தொடங்குகிறது.

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்தும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால் இந்தியா முழுவதும் பட்டய கணக்காளர் தேர்வுகள் அறிவித்தபடி நடக்கும் என்று இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் கூறியுள்ளது.

12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் அடிப்படை தேர்வும் (CA Foundation), அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் மற்றும் இளங்களை வணிகவியல் (B com) போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக எழுத இடைநிலைத் (CA Intermediate) தேர்வும் நடைபெறும்.

இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இறுதி தேர்வை எழுதுவதுவார்கள் (CA Final – Inter). இந்தியாவில் பட்ட கணக்கு தேர்வை சுமார் 5,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

“நான் எழுதும் சேலம் மாவட்ட மையத்தில் மட்டும் 700 மாணவர்கள் எழுதுவார்கள். நாமக்கல் மற்றும் தர்மபுரியில் கூடுதல் மையங்கள் சேர்த்தும் கூட 600 பேர்‌ ஒரே இடத்தில் அடுத்த 21 நாட்கள் எழுத போகிறோம். ஒரே கல்லூரியில் இரண்டு கட்டிடங்களில் நடக்கும் தேர்வை இரண்டு கல்லூரிகளில் நடப்பது போல் கணக்கு காண்பிக்கிறார்கள்” என்று தேர்வு எழுதப்போகும் விக்கி விஜய் என்ற மாணவர் அரண்செய் -க்கு தெரிவித்துள்ளார்.

“சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகம். கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வை ஒத்தி ஒத்திவைக்க வேண்டும் என்று நிர்வாக குழு இயக்குனரிடம் பேசியபோது, அவர் பரிட்சை எழுத தைரியம் சொன்னார்” என்று கூறுகிறார் விக்கி.

“5 நிறுவனங்களுக்கு தணிக்கை பார்த்த பணத்தை வைத்துதான் தேர்வுக்கு 2700 ரூபாய் கட்டி ‌இருக்கிறேன். வேற வழி இல்லாம தான் இதை ஒத்திவைக்க கேட்குறோம். ஆனால் நிறுவனம் வஞ்சனை செய்கிறது” என்று வருத்தத்துடன் கூறுகிறார் விக்கி.

“அரசியல் தலைவர்கள் எங்கள் இருப்பையே அறியாமல் இருக்கிறார்கள். பெற்றோர்கள் மனசுக்குள் பயத்துடன் புழுங்கி கொண்டு இருக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெறுவோமா? இல்லை கொரோனாவிடம் வீழ்வோமா? என்று தெரியாமல் நாங்கள் நவம்பரை எதிர் நோக்கியுள்ளோம்” என்று கூறுகிறார் பட்ட கணக்காளர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விக்கி விஜய்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்