Aran Sei

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்குக் கொலை மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெறவில்லையென்றால் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்குக் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ”அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் கொலை செய்யப்படுவீர்” என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடிதம் அனுப்பியவரின் பெயர் வீரப்பன் என்றிருந்ததாகவும் அதில் முகவரி எதுவும் எழுதப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

துணை வேந்தர் சூரப்பா கொடுத்த புகாரின் பெயரில் இந்தியக் குற்றவியல் சட்டம், பிரிவு 507 மற்றும் 506 (ii) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்