Aran Sei

பொறியியல் படிப்பிற்கு கணிதம் ,இயற்பியல் கட்டாயமில்லை – அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவிப்பு

பொறியியல் பட்டப்படிப்பில் சேர மேல்நிலை வகுப்பில் கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

“தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இல்லையே!” – உயர் நீதிமன்றம் வேதனை

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள கையேட்டில் , பொறியியல் பட்டப்படிப்பில் சேர மேல்நிலை வகுப்பில் கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கணிதம், இயற்பியல்,வேதியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழிற்நுட்பம், உயிரியில், வேளாண்மை, ஆகிய படிப்புகளில் ஏதாவது மூன்றை தேர்ந்தெடுத்திருந்தால் போதும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

மும்பை ஐஐடியில் பழங்குடியின மாணவர்களுக்கான ஒரு இடம் கூட நிரப்பப்படவில்லை – ஆர்டிஐ தகவல்

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள கையேட்டில் பொது பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர 45% மதிப்பெண் பெற்றால் போதும் என்றும், பட்டியலின மாணவர்கள் 40% மதிப்பெண் பெற்றால் போதும் என்றும் கூறியுள்ளது.

மேல்நிலை வகுப்பில் கணிதம், இயற்பியல் படிக்காத மாணவர்களுக்குப் பொறியியல் படிப்பில் கணிதம்,இயற்பியல்,பொறியியல் வரைகலை போன்ற பாடங்களைப் பொறியியல் பல்கலைக்கழகங்களே வழங்கும் என்றும் அந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்