Aran Sei

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் அதிமுக, பாஜக  கூட்டணி – மருத்துவர் எழிலன் குற்றச்சாட்டு

மிழ் நாட்டின் 69% இடஓதுக்கீட்டை அதிமுக பாஜக  கூட்டணி  ஒழித்துகட்டுவதாகக் அரசுகள் மருத்துவர் எழிலன் நாகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டின் அரசு கட்டுபாட்டில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,  தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்  நான்கு பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்புகள் இருக்கிறது” தெரிவித்த அவர், இந்நாள் வரை எல்லா பட்டப்படிப்புகள் 69% இடஓதுக்கீடு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை இருந்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

“இந்த வருடம் அரசுப் பல்கலைக்கழகங்கள் நடத்தப்படும் உயிரி தொழில்நுட்பம் படிப்புகள் (MSc biotechnology) மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.(UNESCO -central).
பல்கலைக்கழக மானியக் குழு தெளிவாக அதன் அறிக்கையில் மாநில அரசு இடஓதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்று கூறினாலும் பாஜக அடிமை அதிமுக அரசு, தமிழ் நாட்டின் சிறப்பாக விளங்கும் 69% இடஓதுக்கீடு ரத்து செய்து மத்திய அரசு 50% இடஓதுக்கீட்டை நடைமுறைப் படுத்தியுள்ளது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துகள் – கங்கனா ரணாவத்தின் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்

“அனைத்து கட்சி கூட்டத்தில் 10% மேல் சாதியினர் இடஓதுக்கீடு கொண்டு வரமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்த அதிமுக எடப்பாடி அரசு.
இந்தத் தொகுப்பில் 10% மேல் சாதியினர் பொருளாதார இடஓதுக்கீடு நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சமூக நீதிக்கு துரோகம் என்று தெரிவித்துள்ளார்.

தந்தைபெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார்.

இந்து ராஜ்ஜியம் அல்ல; நாஜி அரசே பாஜகவின் நோக்கம் – பிரஷாந்த் பூஷண் விமர்சனம்

தமிழ் நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம், தமிழ் நாட்டைப் பாஜகவிற்கு விற்றுவிட்டார் எடப்பாடி
தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்படும் எடப்பாடி அரசை அகற்ற வேண்டும் என்று மருத்துவர் எழிலன் நாகநாதன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்