Aran Sei

“விவசாய சட்டங்களை திரும்ப பெற மாட்டோம்” – அமித் ஷா திட்டவட்டம்

மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாது என்றும் அந்த சட்டங்களில் செய்யவுள்ள திருத்தங்கள் குறித்து எழுத்துப்பூர்வ முன்மொழிவு இன்று (டிசம்பர் 9) அளிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 8), போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க  தலைவர்களில் குறிப்பிட்ட 13 தலைவர்களை மட்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ – நாடு முழுவதும் பெருகிய ஆதரவு

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்திய விவசாயிகள் சபையின் தலைவர் ஹன்னன் மொல்லா, இன்று (டிசம்பர் 9) காலைக்குள் மூன்று விவசாய சட்டங்களில் செய்யத் தயாராக உள்ள திருத்தங்கள் குறித்த எழுத்துப்பூர்வ முன்மொழிவை மத்திய அரசு வழங்கும் என்று அமித் ஷா கூறியதாக  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பை தொடர்ந்து,  அனைத்து விவசாய சங்கங்களுடனான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி இன்று (டிசம்பர் 9) நடைபெறாது  என்று தெரிவித்துள்ளார்.

பாரத் பந்த் – நிலமற்ற விவசாயிகளின் கோரிக்கை என்னவாயிற்று?

”விவசாய சங்கங்கள், மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யக் கோருகிறது. நாங்கள் திருத்தங்களில் திருப்தியடைய மாட்டோம்.” என்று மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து விவசாய சங்கங்களையும் அழைத்து பேசாமல், 13 சங்கங்களை மட்டும் சந்தித்து பேசியது, அவர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது என்று தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

போராடும் விவசாயிகள் மத்தியில் ஒரு நாள் – வீடியோ

“மத்திய அரசின் எழுத்துப்பூர்வ முன்மொழிவைப் பெற்ற பிறகு, விவசாய சங்க தலைவர்கள் சந்தித்து முடிவு எடுப்பார்கள். மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்தல், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டத்தை அமல்படுத்துதல், மின்சார மசோதாவை திரும்பப் பெறுதல்மற்றும் விதிக்கப்பட்ட அபராதங்களை திரும்பப் பெறுதல் போன்ற எங்கள் அனைத்து கோரிக்கைகளிலும் விவசாய சங்க தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.” என்று ராஷ்ட்ரிய விவசாயிகள் மகாசபை செய்தித் தொடர்பாளர் அபிமன்யு கோஹர் தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் 20,000 இடங்களில் நடந்த பாரத் பந்த் போராட்டத்தில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகவும் தொழிற்சங்கங்கள், சில்லறை வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள் மற்றும் பல தொழிலாளர் அமைப்புகளுடன் 25 அரசியல் கட்சிகளும் இதில் பங்குக்கொண்டதாகவும் சம்யுக்ட் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு – லண்டனில் போராடும் இந்திய வம்சாவளிகள்

வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக பஞ்சாப், ஒடிசா மாநிலங்களிலும் மற்றும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களிலும், இந்த பந்த் போராட்டம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான தலைவர்கள் போராட்டங்களில் பங்கேற்க முடியாத வண்ணம், முன்கூட்டியே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தில்லியைச் சுற்றியுள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மாலை 3 மணி வரை முடக்கப்பட்டிருந்தன என்றும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு – லண்டனில் போராடும் இந்திய வம்சாவளிகள்

விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு – லண்டனில் போராடும் இந்திய வம்சாவளிகள்

மேலும், “விவசாய போராட்டங்கள் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு மட்டுமல்ல என்பது இன்று (டிசம்பர் 9) மிகவும் தெளிவாக உள்ளது. இது இந்தியா சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஒரு பெரும் போராட்டமாக மாறியுள்ளது. இதற்கு ஒரு வழி இல்லை என்று மத்திய அரசுக்கு இப்போது தெரிந்திருக்கும்.” என்று ஹரியானாவில் உள்ள பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குர்ணம் சிங் சாதுனி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்