Aran Sei

“பசியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விடமாட்டோம்” – போராடும் விவசாயிகள் உறுதி

credits : the indian express

விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, அரசை நிம்மதியாக இருக்கவிட மாட்டோம் என்று, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் உள்ள, விசாய பொருட்களை விற்கும் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை (14.02.21) நடைபெற்ற மஹாபஞ்சாயத்தில் பேசிய ரகேஷ் திகாய்த், போராட்டத்தை வழிநடத்தும் 40 தலைவர்கள், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கவுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகள் நிதி உதவித் திட்டத்திற்கு நிதி குறைப்பு? – நிர்மலா சீதாராமனின் விளக்கம் சரியா?

“போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்கு ஆதரவாக முடிவெடுக்காவிட்டால், அவர்களை (அரசை) நிம்மதியாக இருக்க விடமாட்டோம்” என்று திகாய்த் கூறியுள்ளார்.

இந்த விவசாய சட்டங்கள், பொது விநியோகத்திட்டத்தை அழித்துவிடும் என்று கூறிய திகாய்த், இந்த சட்டங்கள் விவசாயிகள் மட்டுமல்லாமல், வியாபாரிகள், தினக் கூலிகள் மற்றும் பல தரப்பினரை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

“முதலில் பெரிய கிட்டங்கிகள் கட்டப்பட்டன, அதன் பிறகு இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. (இதிலிருந்து) இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை என்பது விசாயிகளுக்கு தெரியாதா? இந்த நாட்டில், பசியைக் கொண்டு வியாபாரம் செய்ய விடமாட்டோம்” என்றும் திகாய்த் தெரிவித்துள்ளார்.

வட இந்திய மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்ட்ராவில் மகாபஞ்சாயத்து – விரிவடையும் விவசாயிகள் போராட்டம்

மஹாபஞ்சாயத்தில், பல்பீர் சிங் ராஜ்வேல், தர்ஷன் பால் மற்றும் ஹரியானா விவசாயிகள் சங்கத் தலைவர் குர்னாம் சிங் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தர்ஷன் பால், “போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் தியாகம் வீண்போகாது” என்று கூறினார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்