Aran Sei

ராணுவ அதிகாரிகளைத் தேர்வு செய்யும் தேர்வு – ராமர் கோவிலைக் கட்டுவது யார் என்று கேள்வி

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்றுவதற்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்துகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வின் மூலம் இந்திய ராணுவ அகாடமி, அதிகாரிகள் பயிற்சி அகாடமி, இந்தியக் கடற்படை அகாடமி மற்றும் இந்திய விமானப்படை அகாடமிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்தவகையில், ‘பாதுகாப்புப் படை சேவைக்கான ஒருங்கிணைந்த தேர்வு’ கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் 58வது கேள்வியாக “அயோத்தியில் தற்போது கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலுக்கு, கீழ் காண்பவர்களில் யார் கட்டட வடிவமைப்பாளர் (Architect)” என்று கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்வதற்காக, பி.ஓ.சோம்பூரா, சந்திரகாந்த் சோம்பூரா, பிருந்தா சோமயா, பி.வி.டோஷி ஆகிய விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி, கர சேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 32 பேரையும், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கர சேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்