Aran Sei

மதங்களை கடந்து திருமணம் செய்தவர்கள் மீது வழக்கு – நீதிமன்றத்திடம் மீண்டும் குட்டு வாங்கிய உ.பி., அரசு

Image Credit - thewire.in

தங்களை கடந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி மீது, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அமேதியை சேர்ந்த தம்பதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, அலகாபத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், சமீபத்தில் உத்தர பிரதேச அரசு கொண்ட வந்த மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘உங்களுக்கு எத்தனை முறை சொல்வது?’ – மதமாற்ற விவகாரத்தில் உ.பி., அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இதை எதிர்த்து அந்த தம்பதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாகவும், தற்போது குழந்தையும் உள்ளதாவும் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச அரசு, மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்த பிறகு, அந்த சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை பயன்படுத்தி, காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் பேரில், மத மாற்ற தடைச்சட்டத்தின் கீழ், பெண்ணின் கணவர் மற்றும் கணவர் வீட்டார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து, உத்தரபிரதே அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், காவல்துறையினர் தம்பதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளதா தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

மதங்களை கடந்து திருமணம் செய்துகொள்பவர்களை தடுப்பதற்காக, உத்தர பிரதேச அரசு, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுவதும், போலியான கைதுகள் தொடர்ந்து நடப்பதும் நடைபெற்றுவருகிறது. இதுவரை, அலகாபாத் உயர் நீதிமன்றம், மதங்களை கடந்து திருமணம் செய்த 125 தம்பதியினருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்