Aran Sei

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இந்தியாவுடன் இணைய வேண்டும் – மோகன் பகவத்

இந்தியாவின் அண்டை நாடுகளை உள்ளடக்கிய ஒரே தேசமான, அகண்ட பாரதம் குறித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மோகன் பகவத், பிரிக்கப்பட்ட இந்தியா ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்றும், அது வலுக்கட்டாயமாக நிகழக்கூடாது ஆனால் இந்து தர்மத்தின் அடிப்டையில் நடக்க வேண்டும் என்று கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

” இலங்கையிலும் நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் ” – திரிபுரா முதல்வர் பேச்சு

அகண்ட பாரதம், இந்த உலகத்திற்கே நன்மையை ஏற்படுத்தும் என்றும் ஆகவே, நாட்டுப்பற்றை தட்டியெழுப்ப வேண்டும் என்றும் மோகன் பகவத் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சுதந்திரத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்னர் வரை, இந்திய பிரிவினை குறித்து யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், அதை முட்டாள்களின் கனவு என்று கூறியுள்ளார்” என தெரிவித்த மோகன் பகவத் “எது நடைபெறுவதற்கு சாத்தியமில்லை என்று கருதப்பட்டதோ அது நடந்ததுபோல், சாத்தியமில்லை என்று கருதப்படும் ‘அகண்ட பாரததத்திற்கான வாய்ப்பை மறுக்க முடியாது” என்று கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

ரவீந்திரநாத் தாகூர் இந்துத்துவத்தை ஆதரித்தாரா? – ஹிமாத்ரி கௌஷ்

இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில், ‘அமைதி’ இல்லாததால் அங்கு ‘மகிழ்ச்சி’ இல்லை என்று கூறியுள்ள மோகன் பகவத், இந்தியாவுடன் இணைந்தால்தான் அதை மீட்டெடுக்க முடியும் என்று கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் இணைவு என்பது  ‘கட்டாயப் படுத்தல்’ அல்லது ‘ஒடுக்குமுறை’ என்பதில்லை என்றும், ‘மனிதாபிமானம்’ மற்றும் ‘இந்து தர்மம்’ என்றும் மோகன் பகவத் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்தியா மறுபடியும் ‘உலகத்திற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும்’ கொடுக்க முடியும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்