Aran Sei

இறந்த விவசாயி மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி – மனைவி மீது தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்கு

டெல்லி – காசியாபத் எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட, உத்தர பிரதேச மாநிலம் பில்லிபிட் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பல்விந்தர் சிங் போராட்டக் களத்திலிருந்து திடீரென்று காணாமல் போனவர், டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்விந்தர் சிங், பிப்ரவரி 1ஆம் தேதி, சாலை விபத்தில் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

உரிமைகளுக்காக போராடுவதும், போராட்டங்களை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம் – இயக்குனர் வெற்றிமாறன்

பல்விந்தர் மரணமடைந்து 3 நாட்களுக்குப் பிறகு, அவருடைய மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும் சகோதரர் குர்விந்தர் சிங் மீது, ‘தேசிய கௌரவம் அவமதிக்கப்படுவதை தடுக்கும் சட்டம்’ பிரிவு 2ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

டெல்லியில், இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுவரை 200 விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த பல்விந்தர் சிங்கை போராட்டத்தில் உயிரிழந்த தியாகியாகக் கிராமத்தினர் கருதியதாகக் குர்விந்தர் சிங் தி வயர் – யிடம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டக்களத்தை சுற்றி முள்வேலிகள்: பெர்லின் சுவரை நினைவுபடுத்துவதாக எதிர் கட்சிகள் விமர்சனம்

ஆகவே, பல்விந்தரின் இறுதிச் சடங்கை மேற்கொண்ட கிராமத்தினர், அவர் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருடைய உடலில் தேசியக் கொடியைப் போர்த்தியதாக, குர்விந்தர் சிங் தெரித்துள்ளார்.

இந்நிலையில், இறுதிச் சடங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதா தி வயர் தெரிவித்துள்ளது.

ஆனால், இதே போன்றதொரு நிகழ்வு 2016ஆம் ஆண்டு நடைபெற்றதையும், அப்போது இறந்தவரின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டது தொடர்பாகக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததையும் தி வயர் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா

2015 ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம் தாத்திரியில், 52 வயதான முஹம்மது அக்லாக் என்பவரை, பசுவைக் கொன்றதாகக் கூறி ஓரு கும்பல் தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தது, இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவின் சிசோடியா என்பவர், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சிக்கன்குனியா நோய் தாக்கி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கின்போது, அவருடைய உடலில் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டதாகவும், அந்த நிகழ்வில், உத்தர பிரதேச மாநில பாஜக அமைச்சகளும் கலந்துகொண்டதாக தி வயர் தெரிவித்துள்ளது.

ரவின் சிசோடியாவின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்ட படம் தற்போதும் சமூக வலைதளங்களில் பார்க்க முடியவதாகக் கூறியுள்ள தி வயர், இதுகுறித்து அப்போதே எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், உத்தர பிதேச காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்