Aran Sei

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

பிரதமர் மோடி அவர்களே பதவியை விட்டு விலகுங்கள்: எங்களுக்கு அரசாங்கம் வேண்டும் எங்களுக்கு ஒரு அரசாங்கம் தேவைப்படுகிறது. ஆனால், எங்களிடம் அது இல்லை. காற்றிலும் பற்றாக்குறை, நாங்கள் சாகிறோம். கையில் அகப்படுகிற உதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வழிகாட்டுவதற்கு கூட உருப்படியான கட்டமைப்பு இல்லை.

விளம்பரம்

இங்கே, இப்போது, என்ன செய்ய முடியும்?

எங்களால் 2024வரை காத்திருக்க முடியாது. என்னைப் போன்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏதேனும் கோரிக்கை வைக்கும் நாள் வரும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. அவ்வாறு கோருவதை விட சிறைவாசத்தையே நான் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்திருப்பேன்.  ஆனால், இன்று எங்கள் வீடுகளிலும், தெருக்களிலும், மருத்துவமனை கார் பார்க்கிங்கிலும், பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், கிராமங்களிலும், காடுகளிலும், வயல்களிலும் செத்து மடியும் இந்நாளில், நான் ஒரு சாதாரண குடிமகளாக, என்னுடைய சுயமரியாதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, என்னுடைய சக குடிமக்களோடு கைகோர்த்து, ”இப்பொழுதேனும் பதவி விலகுங்கள்” என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களை நான் கெஞ்சி கேட்கிறேன், கீழிறங்குங்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு

நீங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பது ஒரு பேரிடர். உங்களால் அதைத் தீர்க்க முடியாது. மேலும் அதை மோசமடைய செய்வீர்கள். அச்சம், வெறுப்பு மற்றும் அறியாமை என்னும் புறச்சூழலில் வைரஸ் செழித்து வளர்கிறது. வாய் திறந்து பேசுபவர்களை மௌனிகளாக்கும் உங்கள் முயற்சியில் அது தெம்பாக வளர்கிறது. சர்வதேச ஊடகங்களைத் தவிர வேறு எங்கும் செய்திகள் வெளிவந்துவிடாதவாறு ஊடகங்களைத் திறம்பட மேய்க்கும் மேய்ச்சல் நிலத்தில் அது வளர்கிறது. தன்னுடைய வாழ்க்கையில் ஊடக சந்திப்பையே மேற்கொள்ளாத, படு பயங்கரமான  ஆபத்தான இந்தச் சூழலிலும் கேள்விகளை எதிர்கொள்ளவோ திறனில்லாத ஒரு பிரதமர் உங்களுக்கு வாய்த்திருக்கும்போது, வைரஸ் தொற்று மிக வேகமாக வேர்பிடித்து வளரும்.

நீங்கள் கிளம்பவில்லையானல், தேவை இல்லாமல், எங்களில் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் சாக நேரிடும். ஆகவே, உங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு, உங்கள் ஜோல்னா பையோடு கிளம்பிவிடுங்கள்.  தியானமும், தனிமையும் நிரம்பிய சிறப்பானதொரு வாழ்க்கையை நீங்கள் வாழ வாய்ப்பு பிறக்கும். உங்களுக்கு அதுதான் தேவையென நீங்களே கூறியிருக்கிறீர்கள். ஆனால்,  மக்களைச் சாவின் கொடுங்கரங்களுக்கு தொடரச்சியாக சாக  கொடுத்துவிட்டு, உங்களால் நிம்மதியான வாழ்க்கை வாய்க்காது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குக் குறைவானதல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மாநிலத்தின் முதல்வர்கள் சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்ப்பதன் மூலம் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநித்துவம் கிடைத்த உணர்வை அவர்கள் பெறுவார்கள். தேசிய கட்சி என்கிற முறையில் காங்கிரஸும் அந்தக் கமிட்டியில் இருக்கலாம். அதோடு, அறிவியலாளர்கள், பொதுச்சுகாதார நிபுணர்கள், அனுபவமிக்க அதிகாரிகள் என மேலும் சிலரும் அந்தக் குழுவில் இணைக்கப்படலாம். உங்களுக்குப் புரியாவிடினும் இதுதான் ஜனநாயகம். எதிர்கட்சியே இல்லாத (முக்த்) ஒரு ஏற்பாட்டை நீங்கள் ஜனநாயகம் என்று கூற முடியாது. அதைக் கொடுங்கோன்மை என்றுதான் கூற முடியும். வைரஸுக்குக் கொடுங்கோன்மையே பிரியமானது.

‘ட்விட்டர் நிறுவனம் நிறவெறியுடன் செயல்படுகிறது’ – ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக கங்கணா ரணாவத்

நீங்கள் இதைத் தற்போது செய்யவில்லையானால், இந்தப் பேரிடர் சர்வதேச பிரச்சினையாக, உலகின் அச்சுறுத்தலாக கருதபடும், உண்மையும் அதுதான். உங்களின் திறன் குறைபாட்டின் விளைவாக, இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு பிற நாடுகள் நமது நாட்டு உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்கக்கூடிய நிலைமைக்கு நாம் தள்ளப்படலாம். இது நாம் நீண்ட காலமாக போராடி கத்து வரும் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கக்கூடும். மீண்டும் நாம் காலனியாவோம். இது ஒரு அச்சங்கொள்ளத் தக்க உண்மை. இதைப் புறந்தள்ளாதீர்கள்.

ஆகவே, தயவு செய்து கிளம்புங்கள். அதுதான் நீங்கள் செய்யக்கூடிய அதிகபட்ச சாத்தியமான செயல். நீங்கள் எங்கள் பிரதமராக இருப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள்.

(www.scroll.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்