Aran Sei

விவசாயிகள் போராட்டத்தில் ‘தீவிரவாதிகள்’ என மத்திய அரசு குற்றச்சாட்டு – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு

விவசாயிகள் போராட்டத்தில், தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் புகுந்துள்ளதாக மத்திய அரசு கூறிய குற்றச்சாட்டை, எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டத்தில் காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், நீதிமன்றத்தில் வாய்மொழியாக தெரிவித்ததையடுத்து, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : பிரச்சனைக்கு காரணமே நீங்கள் தானா ? – உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

விவசாய சட்டங்கள் தொடர்பான வழக்கு இன்று தமைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா, விவசாய சட்டங்களை ஆதரக்கும் வகையில், இந்த வழக்கில் இடை மனுதாரராக இணைத்துக்கொள்ள கோரிக்கை வைத்துள்ளார்.

அவர்கள் சார்பாக தாக்கல் செய்த மனுவில், “நீதிக்கான சீக்கியர்கள்” (Sikhs for Justice) போன்ற அமைப்புகள், விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பினர் போராட்டத்தில் கலந்துள்ளதாக வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தெரிவித்ததாகவும் லைவ் லா கூறுகின்றது.

அப்போது, குறிக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டோ, “தடை செய்யப்பட்ட அமைப்பினர் போராட்டத்திற்கு உதவுவதாக நரசிம்மா குற்றம்சாட்டுகிறார். இதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா?” என்று அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனவரி 26 பேரணி – லட்சம் டிராக்டர்களை அணிதிரட்டும் விவசாயிகள் சங்கங்கள்

அதற்கு “காலிஸ்தான் அமைப்பினர் போராட்டத்தில் ஊடுருவியுள்ளதாக நாங்கள் தெரிவித்துள்ளோம்” என்று அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.

“அவ்வாறு, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஊடுருவல் இருந்தால், அதுகுறித்து இங்கு குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் இதுகுறித்து நாளை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள்” என்ற தலைமை நீதிபதி, கே.கே.வேணுகோபாலிடம் கூறியதாக லைவ் லா தெரிவிக்கின்றது.

இதற்கு பதில் அளித்த கே.கே.வேணுகோபால், உளவுத்துறையின் தகவலுடன், நாளை விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் – சட்ட நகல்கள் எரிப்பு, “டெல்லி சலோ” பேரணி, பெண்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்ளையும் அமல் படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், பேராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து உத்தரவிட்டது.

குடியரசு தினத்தில் ‘டிராக்டர் அணிவகுப்பு’ போராட்டம் – அனைவரும் ஆதரவளிக்க விவசாயிகள் கோரிக்கை

அந்த குழுவில், விசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாத்தி, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் புபிந்தர் சிங் மான், தெற்காசிய சர்வதேச உணவு கொள்கை அமைப்பின் இயக்குனர் பிரமோத் குமார் ஜோஷி, ஷேத்கரி ஷன்கத்தன் அமைப்பை சேர்ந்த அனில் கான்வாத் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்ததாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்