Aran Sei

இந்துத்துவத்தை இழிவு செய்வது, இந்து மதத்தை இழிவு செய்வதாகாது – வழக்கறிஞர் வாதம்

”இந்துத்துவம் என்பது மதமல்ல, இந்துத்துவத்தை இழிவுப்படுத்துவது மதத்தை இழிவுப்படுத்துவதாகாது” என வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட், சட்ட மாணவர் ஒருவர் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார் என லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்துத்துவம்தான் நம் நாட்டின் சுயராஜ்ஜியம் – மோகன் பாகவத்

கடந்த 2019-ம் ஆண்டு பெங்களுரில் உள்ள அரசு கலை கல்லூரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ”ஃபக் இந்துத்துவா” (Fuck Hindutva) எனும் வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் பயன்படுத்தியதாக, அந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாணவர் மீது கல்லூரியின் முதல்வரால் காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், மனுதாரர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 295 ஏ (மத உணர்வை புண்படுத்துவது), 153 ஏ ( மதம், இனம், மொழி ஆகியவற்றின் மூலம் சமூக ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ) ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா: “கொரோனா இருக்கட்டும், கோயிலைத் திற” – பாஜக அமளி

இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் சந்திரசூட் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

’ராம்விலாஸ் பாஸ்வான் என்னும் தலித் ராமன்’ -ஆனந்த் டெல்டும்டே

அந்த மனுவில், வழக்கறிஞர் சந்திரசூட் “இந்துத்துவம் என்பது ஒரு தத்துவம்,  வாழ்வியல் நடைமுறை அல்லது ஒரு கட்சியின் சித்தாந்தம். இந்துத்துவத்தை இழிவுப்படுத்துவது மதத்தை இழிவுப்படுத்துவது அல்ல, இந்துத்துவத்தை தங்கள் அரசியல் கோட்பாடாக வைத்திருக்கும் கட்சியை இழிவுப்படுத்துவது” என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295ஏ (மத உணர்வை புண்படுத்துவது) பொருந்தாது எனவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153ஏ (சமூக ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துவது) வின் கூற்றுப்படி இரண்டு சமூகங்கள் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஒரு சித்தாந்தம் குறித்து தான் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரிவும் பொருந்தாது என வாதிட்டுள்ளார்.

பெரியார் : இந்துத்துவத்திற்கு எதிரான பாதுகாப்பு அரண் – ர.முகமது இல்யாஸ்

முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் 153ஏ மற்றும் 295ஏ வின் கீழ் குற்றமே நடக்கவில்லை என வாதிட்ட அவர், இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்