Aran Sei

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு யாரிடமும் கருத்து கேட்கவில்லை – ஆர்டிஐ மூலம் அம்பலம்

Image Credit : thewire.in

த்திய அரசு மூன்று விசாய சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்னர், அதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் கருத்தை கேட்கவில்லை என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரிவயந்ததுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆர்டிஐ செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ், வேளாண் அவசர சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டங்கள் குறித்த தகவலை, விவசாய அமைச்சகத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

விவசாயிகள் போராட்டம் : பிரச்சனைக்கு காரணமே நீங்கள் தானா ? – உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

அதில், கருத்து கேட்பு நடத்தப்பட்ட நாள், நேரம், கலந்துகொண்டவர்களின் விபரம் ஆகியவை கேட்கப்பட்டுள்ளது. அதேபோல், இதுகுறித்து மாநிலங்கள் தரப்பில் அனுப்பப்பட்ட கருத்துகள் மற்றும் அதுதொடர்பான தகவல் பறிமாற்றங்கள் குறித்தும் விபரமும் கேட்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் ஆணையத்தின் விதிகள் மற்றும் சட்டம் இயற்றுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய விதிகள் தொடர்பான கொள்கைகளின் படி, அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னர், அந்த வரைவுச் சட்டம் பொதுமக்களின் பார்வைக்கு 30 நாட்கள் வைக்கப்பட வேண்டும். இது தொடர்பான தகவலையும் ஆர்டிஐ மூலம் அஞ்சலி தனியாக  கேட்டதாக தி இந்து செய்தி கூறுகிறது.

இந்த இரண்டு ஆர்டிஐ தகவல் கோரிக்கைகளும், மத்திய அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுக்கு மாற்றி, மாற்றி அனுப்பப்பட்டதாகவும், இரண்டு மத்திய தகவல் அலுவர்கள் இதை செய்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவர் இதுகுறித்த தகவல் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

‘விவசாயச் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கறீர்களா? அல்லது நாங்கள் செய்யவா?’ – உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி

இறுதியாக, விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் பிரிவின், நிர்வாக பொறுப்பாளர் ஒருவர், அதுகுறித்த தகவல் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

மூன்று சட்டங்களையும் கொண்டு வருவதற்கு முன்னர், அதுகுறித்து பரவலாக கருத்து கேட்கப்பட்டதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடர்ந்து கூறிவருகிறார்.

அதேபோல், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்னர் கருத்து கேட்கப்படவில்லை என்று கூறுவது, ‘தவறான தகவல்’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடித்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்