Aran Sei

கோவில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க கோரும் சதி – சூர்யா சேவியர்

பக்தர்களிடம் கோவிலை ஒப்படைக்க வேண்டும்-கேரள தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா.

சிதம்பர ரகசியம் என்றால் என்ன? சிதம்பரம் என்ற சொல்லுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த விளக்கம் THE ATMOSPHERE OF WISDOM.தமிழில் பிரபஞ்ச உண்மை என்று கொள்ளலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் 39 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் அடையாளம் தான் சிதம்பரம் கோவில் லிங்கம். ஆனால் இங்கு உண்மையில் லிங்கம் இல்லை. சிற்றம்பலத்தின் வலது பக்கம் ஒரே ஒரு சிறுவாசல் உள்ளது. இதில் உள்ள திரையை அகற்றி ஆராத்தி காட்டுவார்கள். திரை அகலும்போது லிங்கமோ, அல்லது வேறு எந்த உருவமோ இருக்காது.தங்க வில்வமாலை ஒன்று மட்டும் தொங்குவதைக் காணலாம்.

” 20 கோடி லஞ்சம், பாஜகவில் சேர்ந்தால் ஜாமீன் ” – கைது செய்யப்பட்ட அகில் கோகாயிடம் பேரம் பேசிய என்ஐஏ

திரைமறைவில் இல்லாத லிங்கத்தை இருப்பதுபோல் நினைத்து வழிபடுவதுதான் சிதம்பர ரகசியம். அதாவது பிரபஞ்சத்தில் இறைவன்
நிறைந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டு வழிபடுவது தான் சிதம்பர ரகசியம்.

“குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயில் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல்
மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே”

தில்லை நடராஜரின் திருக்கோலத்தைக்கண்ட திருநாவுக்கரசர், “இந்தஅற்புதக் கோலத்தைக் காண மீண்டும், மீண்டும் நான் பிறவி எடுக்க வேண்டும். பிறவி வேண்டாம் என்று மறுக்கும் பேர்க்கும் மீண்டும் பிறவி ஆசையை உருவாக்கும் திருக்கோலம் இது” என்கிறார். இந்தத் திருக்கோலத்தைக் காணத்தான் நமது நந்தனும் புறப்பட்டார்.

‘கோடை வெயிலுக்கு அஞ்சி வீடு திரும்ப மாட்டோம்; மின்விசிறிகளோடு களத்தில் இருப்போம்’ – ராகேஷ் திகாயத்

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான சைவ,வைணவத் திருத்தலங்களும், கோவில்களும் உள்ளன. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வைணவத்திவ்ய தேசங்கள் 108. அதில் வடநாட்டில் 12, திருநாட்டில் 1 நீங்கலாக தமிழகத்தில் மட்டும் சோழநாட்டில் 40, பாண்டியநாட்டில் 18, சேரநாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22 என மொத்தம் 95 வைணவப் பெருங்கோவில்கள் அமைந்துள்ளன.

அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் முதலிய சைவ நாயன்மார்களால் அருளிச் செய்யப்பெற்ற திருப்பதிகங்கள் கிடைத்துள்ள 275 சிவத்தலங்களில், ஈழநாடு 2, துளுவநாடு 1, வடநாடு 5, நீங்கலாக சோழநாட்டில் 191, பாண்டியநாட்டில் 14, சேரநாட்டில் 1, கொங்குநாட்டில் 7, நடுநாட்டில் 22, தொண்டைநாட்டில் 32 என 267 சைவப்பெருங்கோவில்கள் தமிழகத்தில் உள்ளன.

ரிபப்ளிக் டிவி, அர்னாப் கோஸ்வாமி மீது டிஆர்பி மோசடி வழக்கு – ” விசாரணை 12 வாரங்களில் முடிவடையும் “

சைவ,வைணவக் கோவில்கள் பல இருந்தாலும்,சைவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிதம்பரம் கோவிலும், வைணவ மதத்தைச்சேர்ந்தவர்களுக்கு ஸ்ரீரங்கம் கோவிலுமே முக்கியக் கோவில்களாகக் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி.600-630)கட்டிய குடவரைக்
கோவில்கள், நரசிம்மவர்ம பல்லவன்(கி.பி.630-660) கட்டிய மாமல்லபுரத்துத் தேர்க்கோவில்கள், இராசசிம்ம பல்லவன்(கி.பி.685-705) கட்டிய காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோவில், இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி.7௦5-710) கட்டிய வைகுண்டப்பெருமாள் கோவில் ஆகியவையும்,

இராஜராஜசோழன் (கி.பி.985-1014) கட்டிய தஞ்சைப்பெரியகோவிலும்,
இராஜேந்திரச்சோழன் (1012-1044) எழுப்பிய கங்கைகொண்ட சோழபுரம் கோவில், முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070-1122) கட்டிய
மன்னார்குடி இராஜகோபாலசாமி கோவில், இரண்டாம் இராஜராஜன்
(கி.பி.1146-1173)கட்டிய தாராசுரம் கோவில், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1226) கட்டிய திரிபுவன வீரேச்சுரம் நடுக்க தீர்த்தநாதர் கோவில், பராக்கிரமபாண்டியன்(கி.பி.1422-1463) கட்டிய தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் ஆகியவை கட்டிடக் கலையைப் பறைசாற்றும் கோவில்களாகும்.

“தோழர் ” என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது : சிறப்பு நீதிமன்றம்

இதேபோல் ஒரு குறிப்பிட்ட மன்னனால், ஒரு குறிப்பட்ட காலத்தில் பிரம்மாண்டமாய் கட்டப்பட்ட கோவில் அல்ல சிதம்பரம் நடராஜர் கோவில். பல்வேறு அரசர்களால் பல்வேறு காலங்களில் பெரிதாக்கப்பட்டது.
சைவ,வைணவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பாதிப்பை இந்தக் கோவிலின் மீது ஏற்படுத்தினார்கள். இது உருவான நாள்முதல் இன்றுவரை சர்ச்சைகளுக்குள் சிக்கியே வந்துள்ளது.

தில்லை எனும் ஒருவகை அடர்ந்த மரங்கள் கொண்ட வனமாக, ஆதிகாலத்தில் இப்பகுதி இருந்ததால் “தில்லைஸ்தலம்”எனப்பெயர் வந்தது.கோவில் வந்த கதை இதுதான்.
புராணக்கதையின்படி சிம்மவர்மன் எனும் கவுடநாட்டு மன்னன் பெரும் வியாதியால் பீடிக்கப்பட்டதால், முடி சூட்டிக்கொள்ள மறுத்துவிட்டு, காடாக இருந்த சிதம்பரத்திற்கு வந்தானாம். அவனை வியாக்கியபாத முனிவர் அங்குள்ள சிவகங்கைக்குளத்தில் நீராடச்செய்து நோயைப் போக்கினாராம்.

குளத்தில் நீராடி எழுந்தபொழுது நடராஜர் அவன் கண்முன் தோன்றினாராம். சிம்மவர்மன் என்ற தன்பெயரை இரண்யவர்மன் என்று மாற்றிக்கொண்டு நடராஜருக்கு அங்கு கோவில் கட்டினாராம். கங்கைக் கரையிலிருந்து மூவாயிரம் தீட்சிதர்களை அழைத்துவந்து குடியமர்த்தினாராம்.

நடராஜர் வீற்றிருக்கும் சந்நிதி சிறியதாக இருந்ததால் “சிற்றம்பலம்”
எனப்பெயர். இங்கு வைணவக்கடவுளான பெருமாளுக்கும் ஒரு கோவில் உண்டு. அதற்கு “சித்திரக்கூடம்”எனப் பெயர். இந்தக்கோவில் வளாகத்தில் எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவ மன்னனே பெருமாள் கோவிலைக் கட்டியவன்.

டெல்லி துணைநிலை ஆளுனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா – நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

12 ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு கோபம் வந்தது. நடராஜர் வளாகத்தில் பெருமாள் கோவிலா? பெருமாள் வீற்றிருந்த சித்திரக்கூடத்தை அழித்து, கோவிந்தராஜப்பெருமாள் சிலையைக் கடலில் வீசினான். (தசாவதாரம் படத்தின் முதல் காட்சி ஞாபகம் வருகிறதா?).

கதை இப்படி சொல்லப்பட்டாலும், வரலாற்றின்படி தமிழகத்தில் கி.பி.7ம் நூற்றாண்டில் பக்திஇயக்கம் பரவிய காலத்தில் சொக்கசீயன் எனும் மன்னனால் தென்புற வாசலைக் கொண்டு முதலில் சிறிதாகக் கட்டப்பட்டதே இந்தக்கோவில்.

கி.பி. 7 ம் நூற்றாண்டில் சொக்கசீயன் எனும் மன்னனால் பக்தி இயக்கம் பரவியபோது தெற்குவாசலைக் கொண்டு சிறிதாக இந்தக்கோவில் முதலில் கட்டப்பட்டது. கி.பி.12 ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கச்சோழனால் கிழக்குக்கோபுரம் கட்டப்பட்டது.

கி.பி.1251-1268ல் சடாவர்ம முதலாம் சுந்தரனால் மேற்குக்கோபுரம் கட்டப்பட்டது.
கி.பி.16ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் வடக்குவாசல் கோபுரம் கட்டப்பட்டது.இந்தக் கோபுரம் கடல் மட்டத்திலிருந்து 16௦ அடி
உயரம் கொண்டது.

இந்திய வரலாற்றைத் திரித்த பல்கலைக்கழக மானியக்குழு – கல்வியாளர்கள் கண்டனம்

12ம் நூற்றாண்டில் கடலில் தூக்கிப்போட்ட கோவிந்தராஜப் பெருமாளை, 16ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் தம்பி அச்சுததேவ மகாராயர்
மீண்டும் கோவிலில் “புனப் பிரதிஷ்டை” செய்துள்ளார். பெருமாளை மீண்டும் உள்ளே வைக்கக்கூடாது என்று சொல்லி, தீட்சிதர்கள் பலர் கோவில் கோபுரத்தின் ஏறி,கீழே குதித்து தற்கொலை செய்துள்ளனர்.

சைவ,வைணவ மன்னர்களின் மேலாதிக்கத்தால் இந்தக்கோவில் படாதபாடு பட்டுள்ளது. அதன் பிறகே, அந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர “அரியும்,சிவனும் ஒண்ணு- அறியாதவன் வாயில மண்ணு”என்று கூறத்தொடங்கினார்கள்.

தற்போது நடராஜருக்கும், பெருமாளுக்கும் பிரச்சனை இல்லை. நந்தனுக்கும், நந்தனின் வாரிசுகளுக்கும் தான். தில்லை நடராசரை தரிசித்தே ஆக வேண்டும் என்று சிதம்பரத்திற்கு அருகே கொள்ளிடம் நதிக்கரையில் உள்ள மேற்கானாட்டு ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தன் புறப்பட்டு வந்தார். தில்லைக்கு நாளை போவேன் நாளை போவேன் என சொல்லிக் கொண்டே இருந்ததால் “திருநாளைப் போவார்” என நந்தனுக்கு பெயரும் வந்தது.

நடராசரை வேண்டிக்கொண்டே ஆன்மீகம் முற்றிய நிலையில், கோவிலின் தென்புற வாசல் வழியாக உள்ளே நுழைந்த நந்தனை இழுத்து வந்து தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

நந்தன் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட இடத்தில் தான் இன்றும் ஓமக்குளம் உள்ளது. அதாவது ஹோமத்தீ எரிந்த இடம் என்பதால் அது ஓமக்குளம் எனப்பெயர். இங்கு நந்தன் சிலையை காந்தி திறந்து வைத்த வரலாறும் உண்டு.

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் நந்தனை கொளுத்தியதை ஆனந்தக் கூத்தோடு பதிவிட்டுள்ளார் பெரிய புராணத்தில் சேக்கிழார். அதை படித்ததுண்டா? “இப்பிறவி போய் நீங்க எரியிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய்” என்கிறது பெரியபுராணம்.

ஆன்மீக நந்தனை கொழுத்தியது ஏன்? அவர் தென்புற வாசல் வழியாக நுழைந்தார் என்று, இன்று வரை தீட்டு பட்டதெனப் பூட்டி வைத்திருப்பது ஏன்?
சிதம்பரம் கோவிலின் தென்புற வாசலை நந்தன் வாரிசுகளுக்கு இப்போதாவது திறப்பீர்களா? நந்தன் நுழைந்த தென்புற வாசலைத் திறந்துவிடுங்கள் அமித்ஷா.

சிறுவனை தாக்கிய ஷ்ரிங்கி யாதவுக்குப் பிணை – இந்துத்துவா வன்முறையை இயல்பாக்குகிறதா உத்தர பிரதேசம்?

தீட்சித பக்தர்களிடம் கோவில் இருப்பதால் தானே, நந்தன் பக்தர்களுக்கு வாசலைப் பூட்டி வைத்திருக்கிறீர்கள். சிதம்பரம் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. தீட்சிதர்களிடமே உள்ளது. ஜெயலலிதா அரசு தீட்சிதர்களிடம் சரணடைந்து, நீதிமன்றத்தில் முறையாக வாதம் செய்யாமல், கோவிலையே அவர்களிடம் ஒப்படைத்த வரலாறு இங்குண்டு. அந்தக் கோவிலின் வருமானம் முழுமையும் தீட்சிதர்களுக்கே இபபோதும் சொந்தம்.

பக்தர்களிடம் கோவில் இருப்பது தவறல்ல. எந்தப் பக்தர்களிடம் கோவில் இருக்க வேண்டும் என்று பிரச்சனை எழுந்தது. பார்ப்பன பக்தர்களா? சூத்திர பக்தர்களா? பஞ்சம பக்தர்களா? எந்தப் பக்தர்களிடம் ஒப்படைப்பது? இதனால் தான் அறநிலையத்துறை என்ற ஒன்றே உருவானது.

இசையின் நடுவே படுகொலை – மரண ஓலத்தில் இசையை ரசித்த நாஜிக்கள்

மேலும், மக்களின் வரிப்பணத்தில் மன்னர்கள் கட்டிய பெருங்கோவில்கள் மட்டுமே அறநிலையத்துறையிடம் உள்ளது. பக்தர்களால் கட்டப்பட்ட பல கோவில்கள் பக்தர்களிடம் தான் இருக்கிறது. பார்ப்பனர்களின் கொள்ளையிலிருந்து கோவிலைக் காப்பாற்றத்தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது  என்பது தான் வரலாறு.

மசூதிகளுக்கும், கிறிஸ்தவக் கோவில்களுக்கும் இது பொருந்தாதா என்று கேட்பார்கள். மசூதிகள் அரசால் உருவாக்கப்பட்ட வக்பு வாரியம் மூலம், கிறிஸ்தவ ஆலயங்கள் சொசைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு, வருமான விபரங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதே நடைமுறை தான் சாய்பாபா கோவிலுக்கும் இருக்கிறது. சாய்பாபா கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத பல ஆயிரம் கிராமக் கோவில்கள் இன்றும் இருக்கிறது. கோவில்களைப் பக்தர்களிடம் ஒப்படையுங்கள் என்பதன் பொருள் யாதெனில், பார்ப்பனர்களிடம் ஒப்படையுங்கள் என்பதே.

சூர்யா சேவியர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்