Aran Sei

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் வரி வசூலித்ததில் 4000 கோடி முறைகேடு? – சிஏஜி அறிக்கையில் தகவல்

கார்ப்பரேட் வரியை மதிப்பிடுவதில் சுமார் 4000 கோடி அளவிற்கு தவறோ அல்லது முறைகேடோ நடந்திருப்பதாக ஒன்றிய தணிக்கைத்துறை (சிஏஜி) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக மதிப்புடைய, 356 கார்ப்பரேட் வரி தாக்கல் கணக்கை ஆய்வு செய்துள்ள தணிக்கத்துறை அதில் ரூ. 3,976 கோடி அளவிற்கு கணக்கில் வராமல் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

“இது தவறுதலாக நடைபெற்றது என்றால் வருமான வரித்துறை சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று இன்று (22.12.21) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 – 19 நிதியாண்டை விட 2019 – 20 ஆம் நிதி ஆண்டில், கார்ப்பரேட் வரி வசூல் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் அதேவேளையில், வரிமான வரி வசூல் 18,000 கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 – 19 நிதியாண்டில் 6.63 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி வசூல் செய்யப்பட்டதாகவும், 2019 – 20 ஆம் நிதி ஆண்டில் அது 5.57 லட்ம் கோடியாக குறைந்துள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2018 – 19 நிதியாண்டில் 4.62 லட்சம் கோடியாக இருந்த வருமான வரி வசூல், 2019 – 20 ஆம் நிதி ஆண்டில் 4.80 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும் ஒன்றிய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Tribune

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்