பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ரிபப்ளிக் தொலைகாட்சி அதிகாரப்பூவர்மாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியரான அர்னாப் கோசாமி, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, இந்தியாவின் தலை சிறந்த பத்திரிகையாளராக, பாகிஸ்தான் அரசு மற்றும் ஐஎஸ்ஐ-யின் (பாகிஸ்தான் உளவு அமைப்பு) ஒவ்வொரு மோசமான கட்டமைப்பையும், பயங்கர எண்ணங்களையும் அம்பலப்படுத்தியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
#RepublicVsPakistan | Official statement by the Republic Media Network in response to the statement by the Ministry of Foreign Affairs, Government of Pakistan pic.twitter.com/SAWxijHiF9
— Republic (@republic) January 17, 2021
ரிபப்ளிக் தொலைகாட்சி மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகளின் மூலம், தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளிப்பது உலகத்தின் முன்பு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை முதலில் அம்பலப்படுத்தியது அர்னாப் கோசாமி” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு ரிபப்ளிக் தொலைகாட்சியை வெளிப்படையாக விமர்சித்திருப்பது, ரிபப்ளிக் தொலைகாட்சிக்கு எதிரான சதியில், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் செயல்படுது வெளிப்படையாதிகயுள்ளது என்றும் அந்த தொலைகாட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின்’ (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடலும் இணைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடந்துள்ள அந்த உரையாடலில், அர்னாப் கோசாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது என்று கூறுகிறார். அதற்கு தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார்.
அதற்கு பிரதோ தாஸ், இந்த தேர்தல் சமயத்தில் அந்த பெரிய மனிதருக்கு (நரேந்திர மோடிக்கு) இது சாதகமாக இருக்கும் என்றும், அவர் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்றும் கூறுகிறார்.
அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா? அல்லது அதை விடப் பெரியதா? என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட, என்று பதில் அளிக்கிறார். அத்துடன், பாகிஸ்தானை பொறுத்தவரை, மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகின்றார்.
டிஆர்பி வழக்கில் வசமாக சிக்கிய அர்னாப் – பாஜக ஆதரவை பயன்படுத்தி காரியம் சாதித்தது அம்பலம்
அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள், இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
அதற்கு முன்னர் பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் தாக்குதலை நடத்தியது.
பாலாகோட் தாக்குதல் நடைபெற்று சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 303 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?
நேற்று (17.01.21), பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக அரசங்காம் போலியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்றும், தீவிவாத நடவடிக்கைகளுடன் பாகிஸ்தானை பொய்யாக தொடர்புபடுத்தி வருவதாகவும், பாகிஸ்தான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததை தற்போது வெளியாகியுள்ளது (அர்னாப் கோசாமிக்கும், பார்க் முன்னாள் தலைவருக்கும் இடையில் நடந்த உரையாடல்) மேலும் உறுதிப்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் “தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில், தேசிய உணர்வை மோசமாகக் கையாளுகிறது” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “இந்துத்துவ (பாஜக) அரசுக்கும், இந்திய ஊடகங்களில் அதன் கூட்டாளிகளுக்கும் இடையில் உள்ள, அறம்பிறழ்த தொடர்பை இந்த உரையாடல்கள் விளக்குகின்றன” என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.