Aran Sei

அமெரிக்காவில் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வெறுப்பு நிலவி வருகிறது – மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா

சிய அமெரிக்கர்களுக்கு எதிராக வெறுப்புச் செயல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவும்,பல அமெரிக்க சட்டமியற்றுபவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆசிய அமெரிக்கர்களுக்கு வாதிடும் குழு தகவலின்படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக 3 ஆயிரத்துக்கு எதிரான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தகவலின்படி 2019 ஆம் ஆண்டில், 216 சம்பவங்கள் மட்டுமே பதியப்பட்டிருக்கிறது.

ஞாயிறு முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசம் முடிவு

“அமெரிக்காவில் ஆசிய அமெரிக்கர்களுக்கும், உலகளவில் ஆசிய சமூகத்திற்கும் எதிரான வெறுப்புச் செயல்களால், நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இனவாதம், வெறுப்பு, வன்முறைகளுக்கு நம் சமூகத்தில் இடமில்லை. இந்த அநீதிக்கு எதிராக நிற்பதில் ஆசிய மற்றும் ஆசிய அமெரிக்க சமூகத்துடன் நான் ஐக்கியப்பட்டிருக்கிறேன்,” என்று திரு நாதெல்லா தனது ட்வீட் வழியாக தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியல், ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான ”கொடிய” வெறுப்பு குற்றங்கள், அமெரிக்காவிற்கு எதிரானது, அவை நிறுத்தபட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு அடுத்த தினம், சத்யா நாதெல்லா இந்த ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் ஐயூஎம்எல் சார்பாக பெண் வேட்பாளர் – 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணுக்கு இடமளித்த இஸ்லாமிய கட்சி

அமெரிக்காவின் அதிபராக ஜனவரியில் பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது முதல் உரையில், ஆசிய அமெரிக்கர்கள் இந்தச் சமூகத்தினரால், துன்புறத்தப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டு, பலிகடா ஆக்கப்பட்டனர் என கூறினார்.

வெறுப்பு, இன பாகுபாடு, வன்முறை என அனைத்து வடிவங்களிலுமான வெறுப்பு செயல்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

”கொரோனா தொற்று காலத்தில், ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக, துஷ்பிரயோகம், தாக்குதல் செயல்களுக்குச் சாத்தியமான வலுவான வார்த்தைகளில் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறேன்” என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டொனால்ட் எம். பெய்ன் கூறியுள்ளார்.

ஹத்ராஸ் வன்கொடுமைக்கு எதிராக போராடிய பெண் செயற்பாட்டாளர்கள் : ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை

“வெறுப்புக்கும் வன்முறைக்கும் அமெரிக்காவில் இடமில்லை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தொடங்கிய ஒரு தொற்றுநோய் அமெரிக்கர்களைப் பலிகடாக்களாக்கும் இந்தக் காலத்தில், கோழைத்தனமான முயற்சிகளைப் போன்ற இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அதிர்ஷ்டவசமாக, பன்முகத்தன்மையை ஆதரிக்கும் ஒரு ஜனாதிபதி எங்களிடம் இருக்கிறார், மேலும் அவரது மொழி மற்றும் அவரது நடவடிக்கைகளில் அனைத்து அமெரிக்கர்களையும் பாதுகாப்பார். ஒரு நாடாக நாம் ஒன்றாக வர வேண்டிய நேரம் இது, அனைத்து அமெரிக்கர்களையும் உள்ளடக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.

Sources : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்