Aran Sei

“உங்கள் டிராக்டர் கவர்ச்சிகரமானது” – விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் குரல் எழுப்பிய அமெண்டா

மெரிக்க நடிகை அமெண்டா செர்னி, மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெண்டா தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் “உங்களுடைய டிராக்டர் கவர்சிகரமானது என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் கீழ் ஒரு இன்ஸ்ட்ராகிம் பயன்பாட்டாளர் (@levisingh93) “நீங்கள் இந்திய விவசாயிகள் பக்கம் உள்ளீர்கள். கவலைப்படாதீர்கள், நாங்கள் உங்கள் பக்கம் உள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு தனது அன்பை தெரிவிக்கும் வகையில், ஒரு குறியீட்டை (Smiley) அமெண்டா பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயன்பாட்டாளர் (ayush_radhika06), அமெண்டடாவின் பதிவின் கீழ் “ரிஹான்னா தனது டிவிட்டர் பதிவிற்காக 2.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளார், உங்ளுடையதற்கு நீங்கள் பணம் பெறவில்லை என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு

அதற்கு பதில் அளித்துள்ள அமெண்டா “அப்படியா, எனக்கு பொறாமையாக உள்ளது. என் மனதில் உள்ளதை பேசுவதற்கு பணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று, அந்த பதிவரின் மூக்கை உடைக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அமெண்டா செர்னி, பிப்ரவரி 4 ஆம் தேதி, தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் நடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று டிவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் (@ActionK21) தெரிவித்த கருத்திற்கு அமெண்டா பதில் அளித்திருந்தார். அதில் “திரைப்படங்கள் பிடிக்கும். அடிப்படை மனித உரிமைக்காக, நான் எழுப்பிய குரலுக்காக பாலிவுட் என்னை தடை செய்தால், நீங்கள் என்னை பாலிவுட்டில் (திரைப்படத்தில்) பார்க்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்” என பதிலடி கொடுத்திருந்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லி எல்லைகளில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி; விவசாயிகள் போராட்டத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஆதரவு

கடந்த குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, போராடும் விவசாயிகளின் ஒரு தரப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஹரியானா மாநில அரசு, டெல்லி எல்லையை ஒட்டிய மாவட்டங்களில், இணையத்தை தடை செய்தது. இதுகுறித்து சிஎன்என் தொலைகாட்சியின் இணையதளத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி “இதுகுறித்து நாம் ஏன் பேசுவதில்லை?” என்று, பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்