Aran Sei

மனித உரிமைகளை நிலைநாட்ட தவறினால்? – அண்ணல் அம்பேத்கர் மகத் குள போராட்ட உரை

சத்தியாகிரக குழுவின் தலைவர் என்ற முறையில் அக்குழுவின் சார்பில் சத்தியாக்கிரகிகளை டாக்டர் அம்பேத்கர் வரவேற்றுப் பேசினார். கடந்த மார்ச் மாதம் இதே இடத்தில் நடை பெற்ற மாநாடு துரதிஷ்டவசமான முறையில் முடிவடைந்ததை அவர் நினைவு கூர்ந்தார். இந்த மாநாட்டுக்கு வந்திருந்த ஏராளமான பிரதிநிதிகள் “சௌதார்’ என்ற பொதுக் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்தமைக்காக சாதி இந்துக்கள் எனப்படுவோரால் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டதையும், தாக்கப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குள்த்தின் தண்ணீரைப் பயன்படுத்தியதை யாரும் தடுக்கவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாநாட்டுப் பிரதிநிதிகளைத் தண்டிப்பதென சில குண்டர் தலைவர்கள் முடிவு செய்து அவர்களைத் தாக்கும்படி கூட்டத்தினரைத் தாண்டிவிட்டனர். குற்றவாளிகள் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து, அவர்களுக்கு நான்கு மாத சிறைவாசத் தண்டனை வழங்கப்பட்டது.

அமலாக்கத்துறை மீது வழக்கு பதிவு செய்த கேரள காவல்துறை: சட்டம் தன் கடமையைச் செய்யும் – பினராயி விஜயன்

டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து பேசினார்.

“குளத்தைப் பயன்படுத்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு உரிமை உண்டு என்பதை சாதி இந்துக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த சத்தியாக்கிரகத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் துரதிருஷ்டவசமாக, இப்பகுதியிலுள்ள சாதி இந்துக்கள் தங்கள் போக்கில் முரட்டுப் பிடிவாதமாக உள்ளவர், முகமதியர்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் உட்பட அனைத்து சாதியினருக்கும் பொதுவான இந்தக் குளத்தைப் பயன்படுத்துவதற்குத் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குள்ள உரிமையை ஏற்க அவர்கள் மறுக்கின்றனர். இதில் விந்தையிலும், விந்தை என்னவென்றால் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுவோருக்கு சொந்தமான கால்நடைகள் இங்கு தண்ணீர் குடிப்பதற்கு அனுமதிக்கின்றனர், ஆனால் மற்றவர்களைப் போலவே நல்ல மனித ஜீவன்களான இவர்கள் குளத்துக்குப் போகாதபடி தடுக்கப்படுகின்றளர்.

 மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராக மாநில  அரசுகள் தீர்மானம் நிறைவேற்றலாம் – உச்சநீதிமன்றம்

இந்துக்கள் மனித நேய உயர்வுகள் கொண்டவர்களெனப் புகழப் பெற்றவர்கள், விலங்கினங்களிடம் அவர்களுக்குள்ள அன்பு பிரசித்தமானது, அவர்களில் சில பிரிவினர் கொடிய நச்சுப் பாம்புகளைக்கூடக் கொல்ல மாட்டார்கள். இந்துக்கள் ஏராளமான சாதுக்களையும், திடகாத்திரமான பிச்சைக்காரர்களையும் பராமரித்து வருபவர்கள்; அவர்களுக்கு உணவும், உடையும் கொடுப்பதன் மூலமும் அவர்கள் இன்பக்களியாட்டங்களில் ஈடுபடப் பல உதவிகள் செய்வதன் மூலமும் நாங்கள் நற்பேறுப் பெறுவதாகக் கருதுபவர்கள்.

எங்கும் நிறைந்தது ஆத்மா என்னும் சித்தாந்தத்தை இந்து தர்மம் போதிக்கிறது. ஒரு பிராமணனுக்கும் , சண்டாளனுக்கும் இடையே வேறுபாடு காணக்கூடாது என்று கீதை உபதேசிக்கிறது.

இவ்வாறு இருக்கும் போது இங்கு ஒரு கேள்வி எழுகிறது.

மன்பதை அன்பும், நன்மனப்பாங்கும், மனித நேயமும், விழுமிய தத்துவமும் கொண்ட இந்துக்கள் தங்களது சக மனித ஜீவன்களிடம் ஏன் இவ்விதம் இரக்கமற்று, நியாயமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் இந்த மாநாட்டின் உண்மையான முக்கியத்துவமே பொதிந்துள்ளது.

இந்து சமுதாயம் சாதி அமைப்பு என்ற இரும்புக்கூட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் படித்தர வரிசையில் ஒரு சாதி இன்னொரு சாதியை விடக் கீழ்நிலையில் வைக்கப்படுகிறது; இதன் காரணமாக ஒவ்வொரு சாதியும் இன்னொரு சாதியைவிடக் குறிப்பிட்ட சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவிக்கக்கூடியவையாகவும், தடைக்கட்டுக்களையும், தகுதியின்மைகளையும் கொண்டவையாகவும் உள்ளன. இத்தகைய அமைப்பு முறை சாதிநலக் கும்பல்களைத் தோற்றுவித்துள்ளது. இந்தக் கும்பல்கள் இந்த அமைப்பு முறையிலிருந்து தோன்றும் ஏற்றத்தாழ்வுகளை தமது சுயநலத்திற்குப் பயன் படுத்திக்கொள்கின்றன.

அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மேத்தாவை மீண்டும் பணியமர்த்த வேண்டும் – மாணவர் அமைப்பு கோரிக்கை

பஞ்சமர்கள் (ஐந்தாவது இனத்தை அதாவது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்த்தவர்கள்) பொதுக்குளத்தைப் பயன்படுத்திக் கொள்வதை சாதி இந்துக்கள் எனப்படுபவர்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர்; மகர்களும் அவர்களைப் போன்ற ஏனையோரும் குளத்தைப் பயன்படுத்துவதால் தண்ணீர் கெட்டுவிடும் என்றோ அல்லது ஆவியாய் மாறிவிடும் என்றோ அவர்கள் அஞ்சுவது இதற்குக் காரணமல்ல; மாறாக உயர் சாதிக் காரர்கள் என்ற பெருமையைத் தாங்கள் இழந்துவிடுவோம், மேல் சாதிகாரர்களுக்கும், கீழ்ர்சாதிக்காரர்களுக்கும் இடையே சமத்துவம் ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம்.

இந்தக் குறிப்பிட்ட குளத்தின் தண்ணீர் அசாதாரண சிறப்புடையது என்று கருதி இந்த சத்தியாக்கிரகத்தில் நாங்கள் இறங்கவில்லை, மாறாக குடிமக்கள் என்ற முறையிலும், மனித ஜீவன்கள் என்ற முறையிலும் எங்களுக்குள்ள இயல்பான உரிமைகளை நிலை நாட்டவே இந்த அறப் போரில் நாங்கள் குதித்துள்ளோம்.

சமத்துவத்துக்கான போராட்டம்

சமத்துவம் என்னும் கொடியை ஏற்றி வைக்கவே இந்த மாநாடு நடைபெறுகிறது. 1781 ல் பிரான்சில் கூட்டப்பட்ட தேசிய மன்றத்தைப் போன்றதாக இது இருக்கும். சமூக, சமய, குடியுரிமை, மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளில் அதே சாதனைகளையே நமது மாநாடு குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

சாதி அமைப்பு என்ற உருக்குக் கட்டுமானத்தை உடைத்தெறிய நாம் உறுதி பூண்டுள்ளோம்

குறைந்த குறிக்கோள் கீழானது

சாதி அமைப்பு முறையை விட்டுவிட்டுத் தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதோடு நாம் திருப்தியடைய வேண்டும் என்று சிலர் கூறக்கூடும். சாதி அமைப்பு முறையில் உள்ளார்ந்து பொதிந்துள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவு கட்ட முயலாமல் நீண்டாமையை மட்டுமே ஒழித்துக் கட்டுவது என்பது மிகவும் கீழான குறிக் கோளாகும்.

தோல்வியை விட மிகக் குறைந்த குறிக்கோளை மேற்கொள்வது குற்றம் என்பதை தம் மனத்திற் கொள்ள வேண்டும். இந்தக் கொடுமையை அதன் அடிவேர்கள் வரை ஆராய வேண்டும்; நமது வலியை, நோவைத் தணிப்பதோடு நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. நோய் இன்னதென் சரியாக, உறுதியாக இனம் காணப்படவில்லை என்றால் அதற்கான பரிகாரம் பயனற்றதாகிவிடும். குணமடைதல் தள்ளிப் போகக்கூடும்.

தீண்டாமை மட்டுமல்ல அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்த்து உண்பது சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகளும் அகற்றப்பட வேண்டும். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த இந்துக்களிடையே கலப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடை பெற வேண்டும். இது மட்டுமே உண்மையான சமத்துவத்தைத் தோற்றுவிக்க வழிகோலும். தீண்டாமை என்னும் கறை, வடு, இழுக்கு அகற்றப்பட்டு விட்டதாக வைத்துக் கொண்டால் கூட தற்போதைய தீண்டப்படாதவர்களின் சமுதாயப் படிநிலை எத்தகையதாக இருக்கும் அதிகப்பட்சம் அவர்கள் ‘சூத்திரர்களாக நடத்தப்படுவார்கள், அவ்வளவு தான்.

விவசாய சட்டங்களை அமல்படுத்தக் கோரும் எதிர் கட்சிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை

சூத்திரர்களது உரிமைகள் யாவை? ஸ்மிருதிகள் அவர்களை கிளர்ச்சியாளர்களாக (zealots – ரோம பேரரசின் பல தெய்வ கோட்பாட்டை எதிர்த்தவர்கள் ) . சாதி அமைப்பு முறையில் படிநிலை விஷயத்தில் ‘ஸ்மிருதிகள்’ சாதி இந்துக்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன. நீங்கள் ’சூத்திரர்களாக’ நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? கிளர்ச்சியாளர்கள் என்ற நிலையில் திருப்தியடைய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?  உங்கள் தலைவிதியை உயர்சாதியினரிடம் ஒப்படைக்க  தயாராக இருக்கிறீர்களா?

தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

சுய உதவி

சமத்துவ அடிப்படையில் இந்து சமுதாயம் புனரமைக்கப்பட வேண்டுமென்றால் சாதி அமைப்பு முறை ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. தீண்டாமையின் வேர்கள் சாதி அமைப்பு முறையில் தான் ஆழப்பதித்துள்ளன. சாதி அமைப்பு முறைக்கு எதிராக பிராமணர்கள் கலகக்கொடி தூக்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது: ஏனென்றால் இந்த அமைப்பு அவர்களுக்கு சில தனிச்சிறப்பான சலுகைகளை வழங்கியுள்ளது. அவர்கள் தாமே முன்வந்து தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்: இந்து சமூகப் படிநிலை அமைப்பில் தற்போது அவர்கள் வகிக்கும் மேலாதிக்கம் ஸ்மிருதிகளின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. ஜப்பானின் ‘சாமுராய்கள்’ செய்தது போன்று இவர்கள் தங்களது அனைத்து சலுகைகளையும் விட்டுக் கொடுப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனரல்லாதவர்களையும் நாம் நம்ப முடியாது. நமது போராட்டத்தை நடத்தும்படி அவர்களைக் கேட்க முடியாது. அவர்களில் பலர் இன்னும் சாதி அமைப்பு முறையில் மயங்கிப் போயுள்ளது  மட்டுமல்லாமல் பார்ப்பனர்களின் கருவியாகவும் மாறியுள்ளனர்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் மீது சீற்றம் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கி விடுவதை விடப் பார்ப்பனர்களை மட்டம் தட்டுவதிலேயே மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களும் தாங்கள்  மேலாதிக்க செய்வதற்கு ஒரு குழுவினர் இருப்பதை விரும்புவதோடு, தாங்கள்முழுமையான அடிமைகள் இல்லை என்ற ஆசுவாசத்தை ஏற்பவர்களாக இருக்கிறார்கள்.

கோயிலில் தண்ணீர் குடித்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவன்: சிறுவனின் கல்விக்கு நிதியளித்த பொதுமக்கள்

இதன் பொருள் என்ன? நாம் நம் சொந்த பலத்தைக் கொண்டே நமது போராட்டங்களை நாமே நடத்த யேண்டும். நாம்தான் இந்த நாட்டில் பெரிதும் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருப்பவர்கள், மிதித்துத் துவைக்கப்பட்டிருப்பவர்கள். ராணுவம், காவல்துறை, பொதுத் துறைகள் முதலியவற்றின் கதவுகள் அநேகமாக நமக்கு மூடப் பட்டு விட்டன. பொருளாதார நெருக்கடி என்னும் படு குழியில் தாம் தள்ளப் பட்டுள்ளோம். தீண்டாமையே இவை எல்லாவற்றுக்கும் காரணம்.  இதன் மூலம் படுபாதாள சமூக நிலைக்கு நாம் இறக்கப்பட்டுள்ளோம். மனித ஜீவன்கள், குடிமக்கள் என்ற முறையில் தமக்குள்ள உரிமைகளை நாம் நிலைதாட்டத் தவறினால் தாம் என்றென்றும் படுகுழியில் தள்ளப் பட்டவர்களாகவே இருப்போம்.

நமது இயக்கமானது, நமது போதாமைகளை அகற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டதல்ல, மாறாக, ஒரு சமூகப் புரட்சியைத் தோற்துவிப்பதை நோக்கமாக கொண்டதாகும். அந்த சமூகப் புரட்சியானது குடியுரிமை விசயத்தில் வேறுபாடு பார்க்காமல், மனிதர்கள் தோற்றுவித்த சாதியத் தடைகள் அனைத்தையும் அகற்றி, எல்லோரும் உயர் நிலையை அடைவதற்கு சமத்துவ வாய்ப்புகள் அளிப்பதைக் குறிக்கிறது.

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

இந்துக்கள் அனைவரையும் ஒரே சாதியாக ஒன்று படுத்தும் நமது  இயக்கத்தில் நாம் வெற்றி பெறுவோமேயானால் பொதுவாக இந்திய நாட்டிற்கும் குறிப்பாக இந்து சமூகத்துக்கும் மிகப்பெரிய சேவை செய்தவர்களாவோம், தனித்துவ வேறுபாடுகளும், நியாயமற்ற பிரிவினைகளும் கொண்ட இன்றைய சாதி அமைப்பு முறையானது நமது வகுப்புவாத மற்றும் தேசிய பலவீனத்துக்கான மிகப் பெரிய ஊற்றுக்கண்ணாகும். நமது இயக்கம் வலிமை, ஒருமைப்பாடு, சமத்துவம், சதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை உயர்த்தி பிடிக்கிறது. முடிந்தவரையில் நமது இயக்கத்தை அமைதியான முறையில் நடந்தவே நாம் விரும்புகிறோம். ஆனால் அமைதியான முறையில் நமது இயக்கத்தை நடத்த நாம் கொண்டுள்ள உறுதி நமது எதிரிகளின் போக்கையே பெருமளவுக்குச் சார்ந்துள்ளது. நாம் வலுச் சண்டைக்குப் போகிறவர்கள் அல்ல; அப்படியிருக்க, காலம் காலமாக, தலைமுறை, தலைமுறையாக நம்மை ஒடுக்குகிறவர்கள் வன்முறையாளர்கள்  என்று பூச்சாண்டி  காட்டுவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது!

இருண்ட காலத்தில் இயற்றப்பட்ட ‘சாஸ்திரங்களுக்கும்’, “ஸ்மிருதிகளுக்கும் கட்டுப்பட்டு, அடங்கி ஒடுக்கப்பட்டிருக்கும் போக்கை இனி சகித்துக் கொள்ள முடியாது என்று உறுதி பூண்டிருக்கிறோம். நமது கோரிக்கைகளை நியாயம், நேர்மை மற்றும் மனித நேயத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கிறோம்.

– அண்ணல் அம்பேத்கர் நூல் தொகுதிகள், (தொகுதி 35,  பக்கம் 27-31)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்